வாழ்க்கை வரலாறு
23
களுக் கெல்லாம் அக்காளோ தம்பியோ, அண்ணனோ தங்கைகளோ இருக்கிறார்களே தனக்குச் சகோதரர்களோ சகோதரிகளோ இல்லேயே என்று வேதனைப் பட்டுக் கொண்டிருந்தார் அவர். எனவே, பல வருஷங்களுக்குப் பிறகு ஒரு தங்கை பிறந்த போது அவர் மிகுதியும் உள்ளக் கிளர்ச்சி உற்றார். குழந்தை பிறந்தபோது, மோதிலால் நேரு ஐரோப்பாவில் இருந்தாராம். தம்பி அல்லது தங்கையின் பிறப்பை எதிர்பார்த்து ஜவஹர்லால் வராந்தாவில் ஆவலோடு, பரபரப்போடு, காத்திருந்தார். டாக்டர் ஒருவர் வந்தார். பெண்குழந்தை தான்; நல்ல வேளையாகச் சொத்திலே பங்கு பெற ஒரு பையன் பிறந்து விடவில்லே என்று சொன்னாராம். அவர் சும்மா விளையாட்டாகப் பேசியிருந்திருக்கலாம், என்றாலும், என் உள்ளத்திலே கசப்பும் கோபமுமே பொங்கின. இத்தகைய கேவலமான நினைப்பை நான் கொண்டு விட முடியும் என்று ஒருவர் எண்ணத் துணிந்தாரே என்ற உணர்வால் எழுந்த கொதிப்பு அது" என நேரு குறித்திருக்கிறார்.
நேருவின் பதினேராவது வயது முதல் அவருக்குக் கல்வி புகட்டும் பொறுப்பை ஏற்றவர் பெர்டினாண்ட்டி புரூக்ஸ் என்பார். பல வகைகளில் நேருவின் மனப்பண்பை உருவாக்கியவர் புரூக்ஸ் தான். புத்தங்களை நிறையநிறையப் படிக்க வேண்டும் எனும் ஆசையைத் தூண்டியவர் அவர் தானாம். விஞ்ஞான நுட்பங்களே அறிந்துகொள்ளும் ஆர்வத்தை அவரே வளர்த்து விட்டாராம். தியாஸ்பி, புத்தமதம், ஹிந்து வேதங்கள்,