பக்கம்:நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்.pdf/126

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

124 [] நீங்களும் ஒலிம்பிக் வீரராகலாம்


4. குச்சிமேல் உருளல் (Belly). இம்முறையைக் குச்சி மேல் உருளல் அல்லது கால் விரித்துத் தாண்டல் (Straddle Method) என்று கூறுவர். இது அண்மைக் காலத்தில் பழக்கத்திற்கு வந்து எல்லோராலும் கடைபிடிக்கப் பெறும் புதிய முறையாகும்.


பார்ப்பதற்குக் கண்கொள்ளா காட்சி தரும் இந்த முறை, எல்லா முறைகளிலும் சிறந்ததாகக் கருதப்படுகிறது. ஏனென்றால், குறுக்குக் குச்சிக்கு மேலே, உடல் கடக்கும் போது, முகம், அடிவயிறு எல்லாம் இணைந்தாற்போல் போவதுடன், சமநிலை சக்தி (Centre ofBalance) குச்சிக்கு மேல் வெகு அருகிலேயே இருப்பதால், அதிக உயரம் தாண்ட முடிகிறது. தனது சக்திக்கு மேலும் தாண்ட உதவுகிறது.


‘அதிக உயரத்தைத் தாண்டுவதுதான் உயரத் தாண்டுதலின் நோக்கம் என்பதால், உடலின் சம நிலையைக் குச்சிக்கு அதிக உயரத்தில் தூக்கிக் கொண்டு தாண்டுவதற்கும், உடலை குச்சிக்கு மேல் உருட்டிவிட்டு, சமநிலை சக்தியைக் குச்சிக்கு வெகு அருகிலேயே வைத் திருப்பதற்கும் வித்தியாசம் இருக்கிறதல்லவா? தார் டின் ஒன்றை பத்து பேர் சேர்ந்து தூக்குகிறார்கள். அதை ஒருவனே எளிதாக உருட்டிக்கொண்டு போகிறானே! அது எப்படி? தூக்குவதிலும் உருட்டல் எளிது. அதே போல்தான் இம்முறையும்.