உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

7

கண்ணாடிக் கோப்பைகளைக் கீழே போட்டதும் எழுதுவது போல், தெறித்து ஒலித்தது பெண்களின் சிரிப்பு. பத்மாவின் முகம் சிவந்தது. ‘போங்களடி… வேலையற்றுப் போய்…’ என்று முனங்கினாள்.

புஷ்பா லேசில் போக விடுவாளா அவளை! ‘என்ன இருந்தாலும் நீ பெண்தான் பத்மா. பிரமாதமாகப் பேசினாய். ஆனால், வெட்கம் உன் மூஞ்சியில்…’ என்றாள்.

‘சரி சரி! உன் கிட்டேதான் கேட்டாங்க’ என்று எரிந்து விழுந்து, அவளை உதறி விட்டு நகர்ந்தாள் பத்மா.

தோழிகளின் உல்லாசச் சிரிப்பு, அருவி நீர் போல் துள்ளிக் குதித்துக் கலகலத்தது.

2

தோழிகளோடு உல்லாசமாகப் பேசிக் கொண்டிருந்த போது, உணர்ச்சிப் பரவசத்திலேதான் வார்த்தைகளைக் கொட்டி விட்டாள் பத்மா. என்றாலும், காற்றிலடி பட்டு வரும் வித்து, தானாக நிலத்தில் எங்கேனும் விழுந்ததும், முளை விட்டுச் செடியாகிப் பெரிதாக வளர்ந்து விடுவது போல, உள்ளத்தில் முளைத்த எண்ணம் வலுவுற்று வளர்ந்து கொண்டிருந்தது.

ஆமாம். ஏன் அப்படி இருக்கக் கூடாது? கல்யாணமே செய்து கொள்ளாமல், ஆண்களோடு உறவு கொள்ளாமலே வாழ முடியாதா என்ன? எனக்கு அது சுத்தமாப் பிடிக்கவேயில்லை. கல்யாணம், குடும்பம், பிள்ளை பெறுவது… ஒரு பிள்ளை பிறகு ஒரு பிள்ளை… பிறகு, திரும்ப, மீண்டும்—பிள்ளை, பிள்ளை, பிள்ளையோ பிள்ளை. இதற்குத்தானா பெண் ஜன்மம்? அப்படியென்றால், கல்லூரிப் படிப்பு எதற்கு? தாலி கட்டப்படுவதும், குடும்ப அலுவல்-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/9&oldid=1663264" இலிருந்து மீள்விக்கப்பட்டது