வஞ்சம் 13
எனினும், அந்தப் பார்வையின் அர்த்தம் - சிரிப்பின் பொருள் - விளங்கவே இல்லை!
'இன்னைக்குக் கொஞ்சம் சந்தனக் கட்டைகள் கொண்டு வந்தேன். ஸ்பெஷலாக எடுக்கப்பட்டவை. இந்தப் பக்கத்துச் சக்தன மரங்களில் தனி வாசனை உண்டு. ஏழெட்டுக் கட்டைகளை வண்டியிலே, எடுத்துப் போடச் சொன்னேன். உள்ளே கொண்டு வந்து வைக்கும்படி........”
இன்ஸ்பெக்டர் குறுக்கிட்டார்: "பண்ணையார்வாள்! எல்லைக்குநாதனிடம் ஒரே பேச்சுதான். அப்ப ஒரு பேச்சு; அஞ்சு நிமிஷம் கழிச்சு ஒரு பேச்சு என்கிற விவகாரமே கிடையாது. ரொக்கமாகவோ, வேறு ரகங்களிலோ லஞ்சம் வாங்கும் வழக்கம் நம்மிடம் கிடையாது.”
ஒண்டிப்புலியா பிள்ளை எழுந்தார். 'உம்' என்று சொன்னர், சிறு சிரிப்பு உதிர்த்தது அதன் பின்னால்,“உங்க இஷ்டம்'... நான் வாறேன்’ என நகர்ந்தார்.
வாசல் வரை தொடர்ந்த இன்ஸ்பெக்டர் ஞாபகமூட்டுவது போல் எச்சரித்தார். "பண்ணையார்வாள, ஒரு விஷயமில்லா. சந்தனக் காடு, மூங்கில் காடுகளில் நம்பர் போட்ட மரங்கள் கூடக் காணாமப் போயிருக்குது என்று ரிப்போர்ட் வந்திருக்குது. உங்க 'ஏரியா'விலே திருட்டுப்பயலுக ரொம்ப சுதந்திரமாக உலவுவானுங்க போல் தெரியுது. நீங்க நடவடிக்கை எடுத்தா நல்லது...”
'அப்படியா!' என்று சொல்லிவிட்டுத், தமக்கே உரிய தனிரகச் சிரிப்பைச் சிந்தினார் ஒண்டிப்புலி. அவரது வண்டி மாடுகளின் கழுத்து மணி ஓசை பெரும் சிரிப்பாய்ப் பேரொலியாய்ப் பின்னணி இசைத்து பின் மங்கித் தேய்ந்தது.