உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/7

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

5

வெறும் கதைப்புகள்தான் எல்லாம். புரிஞ்சுதா? என்று அறிவித்தாள்.

'அப்படீன்னா ஆண்கள் எல்லோரும் பைத்தியங்கள், அசடுகள் என்று சொல்கிறாய்?’

'சொல்வதென்ன! அது தானே உண்மை. லட்சியக் காதலுக்கு எடுத்துக்காட்டு என்று பிரமாதப்படுகிறதே லைலாமஜ்னு கதை. அதில் ஒரு உண்மை உங்களுக்குத் தெரியுமோ? லைலா அழகியில்லையாம். கோர சொரூபியாம். பார்க்கவே அருவருப்பு தரும் விகார ரூபம் பெற்றவள். உதடும், மூக்கும்-ஐய்ய! அத்தகைய அவலட்சணம் தான் பூமியிலே சொர்க்க இனிமை அளிக்கக் கூடியவள்; அவள் இல்லையென்றால் வாழ்வே இல்லை என்று திரிந்தானே பைத்தியக்காரன்!அதுமாதிரித்தான் பெரும்பாலானவர்கள்........'

காந்திமதிக்கு இயல்பான சந்தேகம் எழுந்தது. எல்லோர் உள்ள்த்திலும் பிறந்ததுதான். அதை ஒலிபரப்பினாள் அவள்: 'அது சரி, பத்மா. கல்யாணம் செய்துகொள்ளாமல். ஆண்வாடையே வேண் டாக அல்லிராணியாக, வாழ்ந்து விடலாம்; வாழ முடியும் என்று நம்புகிறாயா?'

'ஆமாம். ஏன் முடியாது? பிளாட்டோ சொல்லியிருக்கிறானே. அந்த லட்சிய நிலையை உலகிலே அமுலுக்குக் கொண்டுவர முயன்றால் என்ன? பெண்களை பிள்ளை பெறும் இயந்திரங்களாகவும், ஆண்களின் ஆசையைத் தணிக்கும் கருவிகளாகவும் உபயோகித்து, பெண்களின் வாழ்வைப் பாழாக்குவதோடு, பெண்களையே எப்போதும் பழித்துக் கொண்டு திரியும் போக்கை தடுக்க அவ்வப்போது என்னைப் போன்ற சிலராவது முன்வரவேண்டும. பெண்கள் தனித்தியங்க முடியாது என்றால், பவித்திரமான நட்பு முறையிலே கலந்து பழகட்டுமே!’

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/7&oldid=1663342" இலிருந்து மீள்விக்கப்பட்டது