உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:முத்தம்.pdf/28

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

26

வியந்தாள். அவனிடம் அவளுக்கு அனுதாபம் ஏற்பட்டது. நட்புக்கு ஏற்றவர் என்ற எண்ணமும் ஒரு பிரியமும் எழுந்தன. அவனைச் சந்திக்க வேண்டும், சந்தித்தாகணும் என்று எண்ணி வந்தாள். அவளுக்கு சந்தர்ப்பம் துணை புரிந்தது.

அதனால், மாடிப்படி ஏறிக் கொண்டிருந்த பத்மாவின் உள்ளம் மீண்டும் சொன்னது ‘அவர் ரொம்ப நல்லவர்’ என்று அவளுக்கிருந்த உற்சாக உணர்வு இன்னும் அதிகமாகப் பொங்கிப் பிரவகிக்கவே, அவள் ‘டிராலலால… லல்லலா! லல்லலா, லல்ல லல்ல லல்லலா…’ என்று இசைத்தபடி குஷியாக நடந்தாள்.

6

ஞாயிற்றுக்கிழமை.

தனக்கு அன்று காரணமற்ற, தேவையற்ற பரபரப்பு இருப்பதாக பத்மாவே உணர்ந்தாள். அடிக்கடி ‘ரகுராமன் வந்து விட்டாரா? இன்னும் வரவில்லையே, ஏன்?’ என்று வீட்டுக்கும், வாசலுக்குமாக அலைந்தாள். ‘வருவாரா? வராமலே இருந்து விடுவாரோ?’ என்று சந்தேகம் வேறு.

அன்று காலையில் எழும் பொழுதே, ‘இன்று ஞாயிற்றுக் கிழமை. ரகுராமன் வருவார். வருவதாகச் சொல்லியிருக்கிறார்’ என்று நினைவு புரண்டு கொடுத்தது. அலுவல்களையெல்லாம் முடித்துக் கொண்டு, அதிக சிரத்தையோடு அழகு செய்து முடித்தாள். என்றுமில்லாதபடி அதிக நேரம் செலவு செய்து, கருத்தாக அலங்காரம் செய்திருப்பது பிறகுதான் அவளுக்கு மனதில் பட்டது. ‘எனக்கு இன்றைக்கு என்ன இது! ஏன் இத்தனை உற்சாகமும், படபடப்பும்? ரகுராமன் வந்தால் வரட்டுமே?’ என்று எண்ணி-

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:முத்தம்.pdf/28&oldid=1663323" இலிருந்து மீள்விக்கப்பட்டது