வஞ்சம் 15
ஸ்ரீமதி மீனாட்சியம்மா அங்குமிங்கும் அலைந்து கொண்டிருந்தாள், துடைப்பக் கட்டையைத் தேடித் தான். 'மாடசாமி... வேய் தேவரே .... சுப்பையாப் பிள்ளேய்!” என்று அவர் வாய் ஒலமிட்டுக் கோண்டிருந்தது - சேவர்களைக் கூவி அழைத்தது.
பலரும் ஒடி வந்தார்கள்.
"இதோ என்னமோ ஒண்னு ஓடுதே ...கல் எடுத்துப் போட்டு அடியும் வேய்' என்று உத்திரவிட்டார் இன்ஸ் பெக்டர்.
தேவர் மின்னல் போல் பாய்ந்தார். அவரைச்செடி படருவதற்காக கட்டிருந்த பந்தல் காலில் ஒன்றை, பீம பலத்தோடு பிடுங்கிக்கொண்டு வந்து ஓங்கி அறைந்தார்.
வரும் ஆபத்தை இயற்கை நியதியின் இணையிலா நுண்ணுணர்வு புலப்படுத்திக்கொடுக்க அந்த ஜந்து வேகமாக ஓடமுயன்று கொண்டிருந்தது. இடுக்கிகள் போன்ற முன்புற உறுப்புக்கள் இரண்டையும், கறு மெழுகிலே திரட்டியெடுத்த சிறு குழவிக்கல் போன்ற உடலையும், இரும்புத் தொடுப்பு போன்ற பெரிய வாலையும் - கூரிய கொடுக்கு வளைந்து நின்ற பகுதியைத் துக்கிப் பிடித்தபடி- அது ஓட முயன்றது விசித்திரமாகத்தானி ருந்தது. இருந்தாலும் தேவர் கை வீச்சிலிருந்து அதனால் தப்ப இயலவில்லை.
'பொத்' தென்று போட்டார் தடியை. 'சதக்'கென்று ஒசை, கசுங்கிச் செத்தது அது. குனிந்து பார்த்த தேவர் "கட்டுவாக்காலியில்லா, எசமான் ! எம்மா, எம்மாம் பெரிசு! இது கொட்டினால் என்ன ஆகிறது?" என்று வியப்புக் குரல் கொடுததார்.
மற்றவர்களும் அதைக் குனிந்து கவனித்து ஆராய்ச்சி நடத்தினர்கள்.