உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கதைகள்-3.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

17 வஞ்சம்



இருந்திருப்பின் இதற்குள் அது எத்தகைய ஆபத்தை விளைவித்திருக்குமோ!......

அவர் பெருமூச்செறிந்தார். பெரிய ஆபத்திலிருந்த தப்பிவிட்டவனின் உடல் விதிர் விதிர்ப்பு நீங்காது நடுங்குவது போலவே அவர் தேகமும் நடுங்கியது. மேல் பூராவும் வேர்வை பொடித்திருந்தது உள்ளத்தின் பயத் தைப் பதுக்கி விடுவதற்காக அவர் ஆர்ப்பாட்டமாகக் கத்தினார்.

சவத்தைத் துாக்கி உரக் கிடங்கிலே போடாமே, இன்னம் என்னவேப் பார்வை? மாடசாமி, அதை எடுத்து வீசி எறி .......தேவரே, ஒரு வாளித் தண்ணி கொண்டாந்து அந்த எடத்தைத துப்புரவாகக் கழுவிவிடும். விசம் இருந்தாலும் இருக்கும் . . . உரக்கிடங்கிலேயிருந்து தான் வந்திருக்குமோ என்னமோ! நாளைக்கு உரத்தை எடுத்துப் போக மொட்டை வண்டி கொண்டாரும். என்ன சுப்பையாப் பிள்ளை, உம்ம கிட்டேத்தான் சொல்லுகிறேன்...... இனி உரக் கிடங்கு இங்கே இருக்கப்படாது. வாய்க்காலடித் தோட்டத்திலே பள்ளம் வெட்ட ஏற்பாடு செய்யும். மீனாட்சி, கொஞ்சம் நீத்தண்ணி கொண்டாயேன்........

தேவர் கட்டுவாக்காலியை அப்புறப்படுத்திய பிறகு கூட அதைப் பற்றிய பேச்சு நிற்கவில்லை.

எல்லைக்குநாதரின் நினைவு பண்ணையாரை எட்டியது. அதே சமயத்தில் தேவர் சொன்னர் : “ பண்ணையார் ஒண்டிப்புலியா பிள்ளை இருக்காரே, அவரு, எவ்வளவு பெரிசா இருந்தாலும் சரி; கட்டுவாக்காலியை அப்படியே கையிலே தூக்கிக்கிடுவாரு கிளிக்குஞ்சோடு கொஞ்ககிற மாதிரித்தான் அவருக்கு......'

இன்ஸ்பெக்டரின் உடல் சிலிர்த்தது. உள்ளத்திலே சிது உதைபபு.

3