உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:காலத்தின் குரல்.pdf/37

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

சிவசு: 3 * அவருடைய தயாரிப்புகளை படிக்க வேண்டிய அவசி யமே கிடையாது. படிப்பது வேஸ்ட் ஆஃப் டைம்’ 苑序ár தரமறிந்து வாசிக்கிற ரசிகர்கள் சில கதைகளை வெகு வாகப் பாராட்டிச் சொல்கிறபோது. அவற்றை தேடிப் பிடித்துப் படிக்கும் எண்ணம் ஏற்படும். படித்தால் திருப்தி உண்டாகும். . இன்றையப் பத்திரிகைகளின் தேவையை பூர்த்தி செய்வதற்காகக் கதைகளும் தொடர்கதைகளும் உற்பத்தி செய்து தள்ளுகிறவர்கள், உண்மையில் பத் திரிகை வாசகர்களின் நொறுக்கு திணிப் பசிக்கு தேவைப்படுகிற அசிருசியான தீவனங்களே தயாரிக்கிற 'சரக்கு கால்டர்களாகத் தான் செயல்புரிகிருர்கள். எழுத்தை வேள்வியாக எண்ணுபவன், தொழிலாகக் கருதுபவன்-இவர்கள் தங்களைப் பொறுத்து எப்படி? எழுத்தை வேள்வியாகக் கருதுகிறவர்கள், அபூர்வ மாக ஒருசிலரே இருப்பர்; இருக்க முடியும், இவர் களுடைய வாழ்க்கையே இவர்களே தகிக்கும் நெருப் பாக அமையும்-சமூகச் சூழலில் போதிய மன உறுதி யும், எதிர்ப்படுகிற அனைத்தையும் தாங்கிக்கொள்ளும் மனடலமும், குன்ருத ஆர்வம்-குறையாத ஊக்கம்தளராத தன்னம்பிக்கையும் பெற்றிருப்பவர்கள் இவ் வழியில் வெற்றிபெற்று, சாதனைகள் புரிய முடியும். இது லட்சியப் பாதை. நான் அடிக்கடி குறிப்பிட்டு வந்திருப்பது போல, லட்சியப்பாதை பசும் புல் தடம் அல்ல; ரோஜா வும் மென்மலர்களும் துவப்பட்ட தடைபாதை இல்லை; காங்க்ரீட் ரோடும் இல்லை,