இதுவும் என்றும் பெருமைப்பட்டுக் கொள்வது இவ் ஆர்காரர்களின் இயல்பு ஆக இருந்து வருகிறது.
அ.க:
வயது - பிறந்த வருடம் - மாதம்-தேதி சொல்லுங்களேன்.
வ.க:
நவம்பர் 12, 1920 தமிழில் ஐப்பசி மாதம், ஏதோ ஒரு வெள்ளிக்கிழமை நட்சத்திரம் அனுஷம்.
சிவக:
பெற்ருேர் விவரம் தர இயலுமா?
வ.க:
ராஜவல்லிபுரம் முத்தையாபிள்ளையின் மூன்ருவது மகன் சுப்பிரமணிய பிள்ளே-தகப்பனுர். தாய்-மகமாயி அம்மாள். தெற்குக் கார்சேரியைச் சேர்ந்தவள்.
ராஜவல்லிபுரம் சைவ வேளாளர்களில் கார்காத்தார் என்ற இனத்தினரின் முக்கிய வாசஸ்தலமாக இருந்தது. முத்தையா பிள்ளையின் குடும்பம் பெரியது. என் அப்பா கூடப் பிறந்தவர்கள் ஆறு ஆண்களும் மூன்று பெண்களும் ஆவர். பெண்களுக்கு கல்யாணம்பண்ணி, வாழ்க்கை வசதி செய்து கொடுக்கவும் மகன்கள் ஒவ்வொருவருக்கும் அரைக்கோட்டை விரைப்பாடும், ஒரு வீடும் அல்லது வீடு கட்டிக் கொள்வதற்கு ஏற்ற காலி மனேயும் பாகம் பிரித்து கொடுக்கும் அளவுக்கு தாத்தா முத்தையா பிள்ளை சொத்து உடையவராக இருந்து இருக்கிறர்.
அப்பா திருநெல்வேலி ஹிந்து ஹைஸ்கூலில் கல்வி கற்று பிறகு உத்தியோகம் தேடிக்கொண்டார்கள். உயரமாய் எடுப்பான தோற்றமும் பெற்றிருந்த அப் பாவுக்கு இன்ஸ்பெக்டர்பிள்ளை' என்றமதிப்பும் போன ஊர்களில் எல்லாம் செல்வாக்கும் இருந்தது. சாதா