உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/18

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

16

நல்ல குணமும், நேர்மையும் உள்ள கணவன் கிடைப்பான் என்று கனவு கண்டு வாழும் பூங்கொடிக்கு, வெறித்தனமும் வக்கிர குணங்களும் நிரம்பிய வீணன் வந்து வாய்ப்பதோடு, அவளை தினமும் நரக வேதனைக்கு உள்ளாக்கினால், பெண் ‘நாம் ஏன் பெண்ணாகப் பிறந்து புண்ணாக உலைய வேண்டும்’ என்று வருந்துவதில் தவறு உண்டா?

இந்த ரகமான விவாகங்கள் நிகழ்ந்து விட்ட போது, மேலும், மேலும் தொல்லைகள் அனுபவித்து நரக வாழ்வாக மாற்றுவதை தவிர்ப்பதற்கு, விவாக ரத்து உரிமை பயன்படும். தகுந்த வைத்தியப் பரிசோதனையுடன், விவாக ரத்து அவசியமா, இல்லையா என்பதை தீர்மானிக்க முடியும்.

விவாக ரத்து உரிமை ஒரு ஆயுதம். சக்தியுள்ள ஆயுதம்.

ஆயுதம், ஆப்பரேஷன் செய்யவும் உபயோகப்படும். கொலை செய்வதிலும் பயன்படுகிறது. அது உபயோகிக்கிறவர்களின் தன்மையைப் பொறுத்தது.

குணக்கேடுகளினாலும், பொருத்தமின்மையாலும் எழுகிற கோளாறுகளை நிவர்த்தி செய்வதற்கு உபயோகிக்கக் கூடிய விவாக ரத்து உரிமையை, தற்கொலைத் திட்டமாகவும், சமுதாயத்துக்குக் கேடு விளைக்கும் முறையிலும் உபயோகப்படுத்தலாம்.