என்று ஒரு மாமா இருந்தார். அவரைப் பற்றி அப்பா எங்களிடம் தமாஷாகக் குறிப்பிட்டுப்பாடுவது உண்டு திங்கட்கிழமை சந்தைக்குப் போனான் செந்திமாமன் திருதிரு வென்று முழித்து நின்றான்.செந்திமாமன்! செவ்வாக்கிழமை சந்தைக்குப் போனான் செந்திமாமன் செத்துபாம்பை அடிச்சுப் போட்டான் செந்திமாமன்! புதன்கிழமை சந்தைக்குப் போனான் செந்திமாமன் புடவங்காயைப் பார்த்துப் பயந்தான் செந்திமாமன்! இந்த விதமாக இசைத்துப் பாடி மகிழ்ந்து எங்களையும் மகிழ்விப்பது அப்பாவின் பழக்கமாக இருந்தது. அப்பாவின் அப்பாவான முத்தைய பிள்ளையின் வம்சம் ஆல் போல் தழைத்து அருகு போல் படர்ந்திருந்ததால், ராஜவல்லிபுரம் ஊரில் பெரும்பாலும் நெருங்கிய சொந்தக்காரர்களே மிகுந்திருந்தார்கள். பெரியப்பா சித்தப்பாக்களும் அத்தைமார்களும் அவர்களின் பையன்களும் பெண்களுமாக ஊர் நிறைந்திருந்தது. நான் பிறப்பதற்கு முன்னரே எனது பெரிய பெரியப்பா' இறந்துபோய் விட்டார். அடுத்த பெரியப்பா குடும்பத்தோடு, பக்கத்து விட்டுக்காரராக இருந்தார். சித்தப்பாக்களில் ஒருவர் கல்யாணம் ஆகாமலே, சின்ன வயசிலேயே, இறந்திருந்தார். இன்னொரு சித்தப்பா, மனைவியையும் மூன்று மகன்கள் ஒரு பெண் என நால்வரை விட்டு விட்டு இறந்துவிட்டார். மற்றும் இரு சித்தப்பாக்களில் ஒருவர் மிகவசதியாக வாழ்க்கை நடத்திக்கொண்டிருந்தார். மற்றவர் முரடர் எனப்பெயர் பெற்றிருந்தார். அத்தைழார் மூவரின் கணவர்கள் இல்லை. மக்கள் இருந்தார்கள். பெரிய பெரியப்பாவின் மகள்களுக்குக் கல்யாண மாகிப் பையன்கள் பெண்களோடு வாழ்ந்தார்கள். இப்படியாக நெருங்கிய உறவினர்கள் வளமாக வாழ்ந்து கொண்டிருந்தார்கள். ஊருக்கு வந்ததும், அம்மா கூறியபடி, சில உறவினர் வீடுகளுக்கு அவ்வப்போது அண்ணன் கோமதிநாயகமும் நானும் போய் வந்தோம். 34. 8 வல்லிக்கண்ணன்
பக்கம்:நிலைபெற்ற நினைவுகள்-1.pdf/34
Appearance