உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:விவாகரத்து தேவைதானா.pdf/14

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

12

மட்டுமல்ல. எக்காலத்தும்,,மனைவியும், கணவனை தனக்கு வேண்டியதையெல்லாம் சம்பாதித்து போட வந்தவன்; தனது சுகம் கெடாமல் பாதுகாக்க வேண்டியவன் என்று ராங்கியோடு திரியாமல், அவனிடம் அன்பும், மதிப்பும் காட்ட வேண்டும். பரஸ்பரம் குறைகளைப் பெரிது படுத்தாமல், விட்டுக் கொடுக்கும் தாராள மனதுடன் பழக வேண்டும். தம்பதிகள் நினைவில் நிறுத்த வேண்டிய முக்கிய விஷயங்கள் இன்னும் பல உள. [1]

கல்யாணமானவர்களிடையே பிணக்கும், முறிவும் ஏற்படுவதற்கு, இன்றைய சமுதாயத்தில் வாழ்கிற பொருளாதார பேதமும் முக்கிய காரணம். பெரிய இடத்துப் பெண், கணவனை அலட்சியமாகக் கருதுகிறாள். தன் பிறந்தகத்தில் பணம் இருப்பதால், கணவன் தன் தயவை நம்பி வாழ வேண்டியவன் என்ற அகந்தையோடு பேசுவதிலும், காரியங்கள் புரிவதிலும் ஈடுபடுகிறாள். சிறு மன பேதம் ஏற்படினும், பெற்றோர் வீட்டுக்கு ஓடி விடுகிறாள். அவள் சொல்லைக் கேட்டுக் கொண்டு, ‘இவள் நம் வீட்டிலேயே இருந்து விட்டுப் போகட்டும். இவன் பெண்ணாகப் பிறக்காமல், மகனாகயிருந்தால், நம் வீட்டோடு வைத்திருப்போமல்லவா?’ என்று அகம்பாவத்தோடு கணவனையும், அவனைச் சேர்ந்தவர்களையும் கேவலமாகப் பேசுவது சர்வ சாதாரணமாக இருக்கிறது.

அதே போல், கணவன் பணக்காரன் மகனாக இருந்து, மனைவி சாதாரண குடும்பத்தில் வந்தவளாக-


  1. படித்துப் பாருங்கள்!

    1. கல்யாணத்துக்குப் பிறகு காதல் புரியலாமா?
    2. கல்யாணமானவர்கள் கவனிக்க வேண்டியவை,
    வல்லிக்கண்ணன் எழுதியது.
    ஒவ்வொன்றும் விலை அணா—8.