இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை
34
செட்டியார் பிரிட்டிஷாரிடமும், பிரிட்டிஷ் ஆட்சி யிடமும் மிக்க நன்றி உடையவர் என்று காட்டுவான் வேண்டி இரண்டு கட்டுரைகள் எழுதியிருக்கிருர். வாசகர் என்ன எண்ணுவார்கள் என்ற தயக்கம் சிறிதும் இல்லாமலே, அளவுக்கு அதிகமாக உயர்வு நவிற்சி களைக் கையாண்டிருக்கிருர். -
மெத்தப் படித்த செட்டியார் தாம் அறிந்தவற்றை எல்லாம் ஒரே கட்டுரையில் திணிக்க வேண்டும் என்ற கொள்கை உடையவர் என்று புரிகிறது. ஆகவே, எந்த விஷயம்பற்றி எழுதத் தொடங்கிலுைம், விரிவாக வும் ஏகப்பட்ட பழமொழிகளையும் குட்டிக் கதைகளையும் திணித்தும் எழுதாமலிருக்க முடியவில்லை அவரால். இந்த வகையில் வேதநாயகம் பிள்ளே இவருக்கு வழிகாட்டியாக இருந்திருப்பாரோ என்னவோ