| ?
காலத்தின் துன்பச் சுமைகள், பேரனின் சாவுஎல்லாவற்றையும் எண்ணி, அழவேண்டும். அப்படி அழுவதற்கு நீண்ட நேரம் பிடிக்கும். என்னவாகுலும், அதற்குரிய வேளை வந்து விட்டது. அவள் அழுதே ஆக வேண்டும். இனியும் அதை ஒத்திப்போட முடி யாது. இன்னும் அவளால் காத்திருக்க முடியாது... அவள் எங்கே போவது?
மா பார்க்கரின் வாழ்க்கை கடுமையானதுதான். இழப்பதற்கோ காலம் இல்லை, ஆல்ை அவள் எங்கே போக முடியும்? எங்கே?
வீட்டுக்குப் போக முடி ய ர து. அவளுக்குத் தேவையான தனிமை அங்கே இல்லை. வெளியே எங்காவது ஒரு பெஞ்சு மீது அமர்ந்து அழ முடியுமா? வழியோடு போகிறவர்கள் வந்து கேள்வி கேட்டுத் தொண தொணப்பார்களே? க ன வா னி ன் தனி அறைக்கு மறுபடியும் போகவும் இயலாது. அயலார் வீட்டில் உட்கார்ந்து அழுவதற்கு அவளுக்கு என்ன உரிமை இருக்கிறது? எந்த வீட்டு வாசல்படி மீதேனும் இருந்து அழலாம் என்ருலோ, போலீஸ்காரன் குறுக்கிடு வானே!
ஐயோ, அவளுக்கு இடமே கிடையாதா? அவள் தனித்திருந்து, தனக்குத்தானே எண்ணிக் குமைந்து, தன் இஷ்டம் போல் வெகுநேரம் வரை ஓய்ந்துகிடந்து அழுவதற்கு-எவருக்கும் அவள் தொந்தரவு கொடுக் காமல், எவரும் அவளுக்கு தொந்திரவு தராமல் மறை வதற்கு-ஏற்ற இடம் ஒன்றுகூட இல்லையா? இந்தப் பரந்த உலகத்திலே, அவள் இறுதியாக உணர்ந்தபடி மனம் விட்டு அழுவதற்கும் ஒரு சிறு இ ட ம் கிடையாதா? -
மா பார்க்கர் நின்று கொண்டே இருந்தாள், மேலும் கீழும் பார்த்தபடி, கொடிய குளிர் காற்று விசி