உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் --கு. ப. ரா. வின் மாமனார் கோபமாகப் பேசி னார், துக்க வீட்டில். கு. ப. ரா.,வின் எழுத்துக்களை, அச்சில் வராதவற்றை எல்லாம், புத்தகங்களாக வெளியிடலாம் என்று அ. கி. ஜயராமன் கேட்டார். மாமனார் சுந்தரம் ஐயருக்கு ஆத்திரம். தன் மகளுக்கும் பேரக்குழந்தைகளுக்கும் S. L_j. IT FT. எதுவுமே விட்டுப் போகலையேன்னு.அவங்களை நல்ல படியா வாழவைக்கவுமில்லையே என்றும் கோபம், பெரிய எழுத்தாளன், என்ன பெரிய எழுத்தாளன்! கட்டின பெண்டாட்டியையும் குடும்பத்தையும் காப்பாத்த முடியாதவன் என்ன பேரு பெற்று என்னத்துக்கு? அவன் என்ன எழுதி என்ன பிரயோ ஜனம்: இவர் எழுதியதை எல்லாம் நான் யாருக்கும் தர முடியாது. யாரும் அவற்றை புஸ்தகமாப் போட வேண்டியதில்லை. அவற்றை எல்லாம் நான் தீயிலே போட்டுக் கொளுத்தினாலும் கொளுத்துவேனே தவிர, ஒருத்தர்கிட்டேயும்கொடுக்கமாட்டேன்னு கத்தினார்...... இதை ரெட்டியார் என்னிடம் தெரிவித்தார். மனித உறவுகள், நட்புகளின் போவித்தன்மைகள் என் உள்ளத்தில் தழும்புகள் பதித்தன. அங்கே மண்டிய கசப்பை மேலும் கணத்துக் கவிய வைத்தன. கிராம ஊழியன் காலத்தில் ந. பிச்சமூர்த்தி துறையூருக்கு அருகில் உள்ள செட்டிகுளம் கிராமத் @si G Sausio 5 rrgar sy Gests furt R (Endowment Officer) பணியாற்றிக் கொண்டிருந்தார். அந்த உத்தியோகம் தொடர்பாக அவர் அடிக்கடி துறையூர் வரவேண்டியிருந்தது. அவர் நட்பு உணர் வோடும் பிரியத்துடனும் என்னோடு பழகினார்.