34 வல்லிக்கண்ணனின் போராட்டங்கள் 'இன்றைய சமூக நிலையில் வல்லிக்கண்ணன் ஒரு விதவைப் பெண்ணை கூட்டிக் கொண்டு போனால் த அது தவறோ குற்றமோ இல்லை. அவளை அவர் கல்யாணம் செய்து கொள்ள வேண்டும். அது சமூகத் துக்கு நன்மை செய்வதாகும்.” . 'நான் இலங்கையில் ஒரு பெண்ணை கல்யாணம் செய்து கொண்டேன். அது கலப்புத் திருமணம். அது மட்டுமல்ல, சர்வதேச முக்கியத்துவம் பெற்றிருக்க வேண்டிய ஒரு நிகழ்ச்சி. அது இன்ட்டர்நேஷனல் இவன்ட் ஆகக் கொண்டாடப்பட்டிருக்க வேண்டும். ஆனால் தமிழ்நாட்டில் அது கவனிக்கப்படாமலே போய் விட்டது.' இப்படி எதையாவது வ.ரா. சொல்வார். "தான் பலரையும் தாராளமாகப் பாராட்டுகிறேன் என்று குறை கூறுகிறார்கள். அது சரியில்லை என் கிறார்கள். நம்மவர்களுக்கு பாராட்டுவதற்கே மனம் வருவதில்லை. பாராட்ட வேண்டியதை வெளிப்படை யாகப் பாராட்டாமல் இருப்பது தப்பு. அதனால், வளரவேண்டியவர்கள் வளராமல் இருந்து விடுகிறார் கள். முன்னேற வேண்டியவர்கள் முன்னேறாமலே போகிறார்கள். நான் தாராளமாகப் பாராட்டுவேன். அதனால் உற்சாகம் அடைந்து, நிமிர்ந்து நின்று, முன்னே நடப்பதற்கு ஊக்கம் பெறுகிறவன் பெறட்டுமே. தெம்பு இல்லாமல் கீழே விழக்கூடியவன் விழுந்து விட்டுப் போகிறான். அதுக்காக எடுத்த எடுப்பிலேயே நீ உருப்பட மாட்டே, நீ செய்வது எதுவும் சரியாகயில்லை என்ற தன்மையில் சபிக்க வேண்டுமா என்ன?’ என்றும் வ.ரா. சொல்வது வழக்கம். , «
பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/36
Appearance