உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணனின் போராட்டங்கள்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வல்லிக்கண்னனின் போராட்டங்கள் , 37 எனினும் அது ஒரு சிறந்த முயற்சி என்பதில் சந்தேகம் இல்லை. பிற்காலத்தில் தமிழில் அவ்விதமான சிறுகதைத் தொகுப்புகள் தயாரிக்கப்படாமல் போனது பெரிய குறைபாடே ஆகும். ஒவ்வொரு வருடமும் அனைத் துப் பத்திரிகைகளிலும் வெளிவந்த கதைகளில் சிறந்த வற்றை தேர்ந்து தொகுத்து, அந்த வருடத்திய சிறந்த சிறுகதைகள் என்று தொகுப்பு நூல்கள் பிரசுரிக்கப் பட்டிருந்தால் சிறுகதையின் வளர்ச்சியையும் வளத் தையும் புரிந்து கொள்வதற்கு அவை நன்கு உதவும். அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் இந்த விதமான கதைத் தொகுப்புகள் நிறையவே வந்துள்ளன. தமிழ் நாட்டில் நிலவுகிற இந்தக் குறையைப் பற்றி நான் பல சந்தர்ப்பங்களில் குறிப்பிட்டிருக் கிறேன். - அடிக்கடி நான் பேசியும் எழுதியும் வருகிற இன்னொரு குறைபாட்டையும் இங்கே கூறுவதில் தவறு எதுவும் இல்லை. தமிழில் பழம்தமிழ் இலக்கியங்கள் கடல் கோளி னாலும், தீயினாலும், கறையான் அரிப்பாலும், மக்களின் கவனக் குறைவாலும் அழிந்துபோய் விட்டன; அவை பேரிழப்பு ஆகும் என்று சொல்லப் படுகிறது. - - தமிழ் நாட்டினரின் ஆர்வமின்மையும், அக்கறைக் குறைவும், அறியாமையும் தற்காலத் தமிழ் இலக்கியத் திலும் பேரிழப்புகளுக்குக் காரணமாய் அமைந்து வந்திருக்கின்றன. காரணமும் செயலும் இன்னும் நீடிக்கின்றன; தொடர்ந்து வளர்கின்றன. @l-3