பக்கம்:விடிவெள்ளி.pdf/150

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

ல்ல்விக்கண்ணன் 149 அம்மா!' என்று வாய்நிறைய உச்சரித்து வீட்டினுன் எட்டிப் பார்க்க மாட்டானா என்று தவித்தது. அத் தாயுள்னம். - நேரம் ஆக ஆக அவள் உள்ளத்திலும் உணர்விலும் த்ெளிவற்ற பரபரப்பு ஏற்பட்டது ஒவ்வொரு வீட் டிலும் ஊரிலும் கூட ஒருவிதப் பரபரப்பு ஊர்ந்தது. கண்ணுக்குப் புலனாகாத ஒருவிஷ ஜந்துவின்-அல்லது அதீத சக்தியின்-பயங்கரமான மூச்சு, காற்றோடு காற்றாகக் கலந்து வருவதுபோல் தோன்றியது. உன்னத் தைச் சிலிர்க்க வைக்கும்--இரத்தத்தை உறையச் செய்யும். உ. லெல்லாம் புல்லகிப்பு ஏற்படுத்தும்-அம்மாயசக்தி யின் பனித்தன மென் விரல்கள் நீண்டு, எங்கும் தடவி, எல்லாவற்றையும் அகப்படப்பற்றி-அள்ளிப் பிழித்து திருகி-டுைப்பது போலிருந்தது. அன்னம்கூட அத்த "ஜுர வேகத்திற்கு ஆளாகித் திணறினாள். அச்சம் தரும் உணர்வுக்கு ஒலி உருவம் கொடுத்தது போல் மிதந்து வந்தது குதிரைகளின் குளம்பு ஒசை. வெறி யர்களின் ஆராவாரக் கூச்சல் தொடர்ந்தது. அபலை களின் அவலக் குரல் ஒரு மூலையில் எழுந்தது. சிறிது நேரத்திலேயே அது பேரொலியாய்-பெகுத்த ஒப்பாசி யாய் செயல்திறம் இழந்தவரின் வெற்று ஒலமாய்க் கனத்து, எங்கும் பெருகியது. அவ்வூரே கொலைகளின் பண்ைைனயாக மாறியது; கொள்ளையின் களஞ்சிய மாகியது; அநீதியின்-வஞ்சகத்தின்-கொடுரத்தின் பேய்க் களமாகத் திகழ்ந்தது. தப்பி ஒட முயல்வோரும் தடுக்கி விழுவோரும் தொல்லை கொடுப்போரும், கொலை புரிவோரும் முட்டி மோதிக் குழப்பினர்; குழப்பத்தைப் போற்றி வளர்த்தனர். - அன்னம் தன் நிலை மறந்தான். உணர்ச்சி வயப்பட் டாள். காளியாக மாறி நின்றாள். நீண்ட வேல் கம்பு ஒன்றை அவள் கரங்கன் அழுத்தமாகப் பற்றியிருத்தன. விடி-16 . . . . - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:விடிவெள்ளி.pdf/150&oldid=905945" இலிருந்து மீள்விக்கப்பட்டது