உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/26

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

வளர்ந்தது. டி. எஸ். சொக்கலிங்கம் அதன் ஆசிரியராகப் பணியாற்றினார்.

தினப்பத்திரிகை அளவில் பெரிதாக ஹனுமான்' என்ற வாரப் பத்திரிகை வந்தது. தேசீய உணர்வும். எழுத்தாற்றலும் அதிகம் கொண்டிருந்த எழுத்தாளர்கள் அதை வளர்த்தார்கள். இது 1930களின் பிற்பகுதியில்.

"சண்டே டைம்ஸ் என்ற ஆங்கில வார இதழை நடத்திய நிறுவனம், ஹனுமான்' போல, ஹிந்துஸ்தான்’ எனும் இதழைத் த மி N ல் பிரசுரித்தது, சுவாரஸ்யமான தகவல்கள், செய்திகள், குறிப்புகள், துணுக்குகள், ஒரு கதை, ரசமான கட்டுரைகளுக்கு முக்கியத்துவம் அளித்த சண்டே டைம்ஸ் பாணியிலேயே இது . வெளிவந்தது. ஏராளமான போட்டோக்களும் அதில் இடம் பெற்றிருந்தன.

1930 களின் முற்பகுதியில் தோன்றி படிப்படியாக வளர்ந்து கொண்டிருந்த ஆனந்த விகடன் அதிகமான வாசகர்களைப் பெறத் தொடங்கியது. முதலில் மாத இதழாகப் பிரசுரமான விகடன் சிறிது காலத்தில் மாதம் இரு முறை ஆகி, விரைவில் மாதம் மும்முறை என வளர்ந்து, குறுகிய காலத்தில் வாரப் பத்திரிகை யாக மலர்ச்சி பெற்றது.

'ஆனந்த விகடன்' நகைச்சுவையை ஆதாரமாகக் கொண்டு, ஜனரஞ்சகமான விஷயங்களை - கனமும் ஆழமும் இல்லாத பொழுது போக்குக் கதைகள், கட்டுரைகளை - தத்தது. அத்துடன் வாசகர்களின் கவனத்தை ஈர்த்து, அவர்களது ஆசையைத் தூண்டி,

இ வாசகர்களும் விமர்சகர்களும் 16s,