பக்கம்:வாசகர்கள் விமர்சகர்கள்.pdf/99

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

இருந்தது. எனவே தொடர்ந்து துர்கனேவ், கார்க்கி முதலியவர்களது எழுத்துக்கள் தமிழில் நிறையவே வெளி வந்தன.

மொழி பெயர்ப்புக்கும் புத்தக வெளியீட்டுக்கும் உந்துதல் கொடுக்கும் விதத்தில் சோவியத் ரஷ்யா போருளுதவி செய்ய முன் வந்தது. எனவே, மாக்சிம் கார்க்கி படைப்புகளும், இதர ரஷ்ய இலக்கியங்களும், வேகமாகத் தமிழாக்கப்பட்டு, புத்தகங்கள் ஆயின. 1950 களில்,

அதே சமயம், அமெரிக்காவும் நூல் வெளியீட்டுத் திட்டத்தில் முனைந்து பதிப்பகங்களுக்குப் பொருளுதவி செய்தது. கம்யூனிச எதிர்ப்புப் பிரசார நூல்களைத் தமிழில் வெளியிடுவதோடு, பெயர் பெற்ற அமெரிக்க இலக்கியப் படைப்புகளையும் மொழி பெயர்த்துப் பிரசுரிக்க இத்திட்டம் வகை செய்தது. இதன் மூலம் நல்ல படைப்பாளிகள் அநேகரது எழுத்துக்கள் தமிழில் வருவதற்கு வாய்ப்பு ஏற்பட்டது. இவ்வகையான புத்தகங்கள் குறைந்த விலையில் விற்கப்பட்டதால், அவற்றுக்கு வாசகர்கள் போதுமான அளவு சேர்ந்தார்கள்.

சில படைப்பாளிகளின் எழுத்துகளுக்கு நல்ல வரவேற்பு இருந்ததால் - முக்கியமாக சரத் சந்திரர், மாக்சிம் கார்க்கி, டால்ஸ்டாய் ஆகியோருக்கு - பிரசுரத் தொழிலில் ஈடுபட்டவர்களில் சிலர் எளிதில் பிசினஸ் வெற்றி பெற ஆசைப்பட்டு. ஒரே படைப்பை வெவ்வேறு

பெயர்களில் வெளியிட்டார்கள்.

வாசகர்களும் விமர்சகர்களும் 89