உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லேசர் அறிவியல்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நுட்பம் ஆகிய மூன்று துறைகளில் அமையுமாறு முறைப்படுத்தி எழுதப்பெற்றுள்ளது. இலேசர் வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு பற்றிக் குறிப்பிடப் பட்டிருப்பது இந்நூலின் தனிச்சிறப்பு. தவிரச் செம்மையான நூலுக்குரிய கருவிநூல் தொகுப்பு. கலைச் சொல் தொகுப்பு, பொருள் முதல் குறிப்பு ஆகியவை இறுதியில் சேர்க்கப் பெற்றுள்ளன. பதிப்புச் செம்மல் முனைவர் ச. மெய்யப்பன் அவர்கள் புதிய அறிவியல் வரிசையில் சில நூல்கள் எழுதித் தருமாறு அன்புக் கட்டளை இட்டார்கள். அதற்கேற்பச் சீரிய திட்டம் வகுக்கப்பட்டது. அதன் விளைவாக இவ்வரிசையில் வெளிவரும் முதல் நூல் இதுவே. இதைத் தொடர்ந்து வெளிவருவன பின்வருமாறு: 1. உயர்நிலை உயிரியல் 2. தொலையுணர் அறிவியல் 3. வெப்பநிலை அறிவியல் 4. வானவெளி அறிவியல் இவை விரைவில் ஒன்றன் பின் ஒன்றாக வெளிவரும். இச்சீரிய திட்டத்தைத் தொடங்கிச் செயற்படுத்திய பதிப்புச் செம்மல் அவர்களுக்கு நன்றி எவ்வளவு கூறினாலும் தகும். வாசகர்களுக்குப் புத்தம் புதிய செய்திகள் ஐந்து இளைய அறிவியல்களைப் பற்றிக் கிடைப்பது ஒரு பெரும் பேறு ஆகும். முடிவாக, இந்நூல் வளரும் தமிழுக்கு ஒர் ஆக்க நூல். இந்நூல் பற்றி வாசகர்கள் கருத்தேற்றங்கள் பெரிதும் வரவேற்கப் படுகின்றன. "மெய்ப்பொருள் காண்ப தறிவு" - அ.கி. மூர்த்தி தொ.பே. 20139 தொல்காப்பியரகம் திருவள்ளுவர் அச்சகம் தஞ்சாவூர் - 613 009.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/8&oldid=887087" இலிருந்து மீள்விக்கப்பட்டது