வ. ரா. பாரதியின் சீடர். பாரதி கூடப் பழகியவர்அவரோடு அநேக வருடங்கள் புதுச்சேரியில் வசித்தவர். பாரதியின் பெருமையை எடுத்துப் பேசுவதைத் தனது வாழ்வின் குறிக்கோளாகக் கொண்டிருந்தவர். பாரதி மகாகவி தான் என்று முதன் முதலாக ஓங்கிக் கூறி வாதாடி அதை நிலைநிறுத்திய பெருமை வ . ரா , வுக்கே உரியது, வ. ரா. எழுதிய மகாகவி பாரதியார்”என்ற நூல் தான் பாரதி பற்றிய சிறந்த வரலாற்று நூலாக இப்பவும் திகழ்கிறது.
சங்கு சுப்பிரமணியன், வ. ரா. டி. எஸ். சொக்கலிங்கம் முதலியவர்களின் எழுத்துக்கள் வாசகர்களால் விரும்பிப்படிக்கப்பட்டன. எனினும் அவர்களது எழுத்துக்கள் பிரசுரமான பத்திரிகைகள் பலவும் ஆயிரம் பிரதிகளுக்கு உள்ளேயே அச்சாகின. அப்பத்திரிகைகள் தொடர்ந்து நீண்ட காலம் சேவை புரிய முடிந்ததுமில்லை.
செய்திப் பத்திரிகைகளின் தேவை அதிகரித்தது. விடுதலைப் போராட்ட நிகழ்ச்சிகள் பற்றிய செய்திகளை மக்களுக்கு அறிவிப்பதற்கும், தலைவர்களின் கருத்துக் களைப் பரப்புவதற்கும், நாட்டு மக்களுக்கு தேசபக்தி ஊட்டுவதற்கும் தினப்பத்திரிகைகள் தேவைப்பட்டன.
இந்தியாவின் பல்வேறு மொழிகளிலும் புதிது புதிதாக நாளிதழ்களும், வாரப் பத்திரிகைளும் தோன்றுவது காலத்தின் கட்டாயம் ஆயிற்று. தமிழிலும் அவ்வாறே நிகழ்ந்தது.
1930 களின் முற்பாதியில் தினமணி தோன்றி
இ வாசகர்களும் விமர்சகர்களும் 15