பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

கடிதங்கள் 2 3

காட்சி இனிமை,

சூரிய அஸ்தமனம் நகரின் மேலும், நகரத் தெருக்களிலும் பரப்பிய காட்சிகள் மோகனமானவை.

அன்பு

&ij, é.

மதுரை 20-3–93

அன்புமிக்க கல்யாண்ஜி, வணக்கம். மீண்டும் கல்யாண முருங்கை பூக்க ஆரம்பித்து ஒரு மாதத்துக்கு மேலாகிறது. வழக்கம்போல் பிப்ரவரியில் செக்கச் சிவந்த முருக்க மலர்கள் காட்சி தந்தன. சில நாட்களுக்கு முன்பு சென்னையின் மிகப் பரபரப்பான பெரிய ரோடின் ஒரத்திலே ஓங்கி வளர்ந்து நின்ற முள்ளு முரங்கை மரங்கள் மலர்க்கொத்துகளை சூடி நிற்பதையும், ரோடில் மலரிதழ்களை தெளித்திருந்ததையும், காணநேர்கையில் சந்தோஷமும் வியப்பும் ஏற்பட்டது. இந்த இடத்திலே இந்த மரங்களும் பூக்களுமா என்று.

வெயில் கடுமைதான்.

கடிதம் எழுதவேண்டும் என்ற நினைப்புக்குக் குறைவில்லை. கடிதம் எழுதுவதில, தான் ரொம்ப தாமதம்.

நீங்கள் தந்த கனிவு தொகுதியை மெது மெதுவாகப் படிக்கிறேன். போன வாரம் ஆத்மன் கொண்டு தந்த மனுஷா மனுஷா கதைத் தொகுப்பை படித்தேன்.

வாழ்க்கையின், சுற்றுப்புறங்களின், சின் னச் சின் ன இனிமைகளை, சந்தோஷங்களை எல்லாம் கண்டு கண்டு ரசித்து இன்புற வேண்டும் என்று எப்பவுமே நான் சொல்லி வந்திருக்கிறேன். ஆனாலும் மிக துட்பமான, மனோகரமான, சந்தோஷ இனிமைகளை நான் கண்டு வியந்து ரசித்து மகிழ்ந்ததாகச் சொல்வதற்கில்லை உங்கள் பார்வையும் மனமும் மிகமிக துண்மையான, சிறுசிறு அதிசய இனிய சந்தோஷ-சாதாரண-விஷயங்களை பதிவு செய்துள்ளன. இவற்றை உங்கள் எழுத்துக்களில் படிக்கிற போது வியப்பும் மகிழ்ச்சியும் உண்டாகின்றன.