25 స్టి | வல்லிக்கண்ணனின் மணியான கதைகள் | அடித்தார். “உம் இறங்குங்கள், ஸார்!’ என்றார். விஸ்வநாதனுக்கு மிகுந்த மனக்கஷ்டம்தான். அவன் முகம் வாட்டமுற்றது. தயக்கத்துடன் எழுந்தான். 'கண்டக்டர், இந்தாப்பா, ஒன்றரை نیےg 685T fT; டிக்கெட்டை அங்கே கொடுத்து விடு!" என்று ஒரு குரல் கணிரென ஒலித்தது. எல்லாரும் திரும்பி நோக்கினர். விஸ்வநாதனும் பார்த்தான். * - - ஒரு nட்டின் ஓரத்தில் இருந்த யுவதி ஒருத்திதான் துணிந்து அவ்விதம் உதவி புரிந்தாள் என்று உணர்ந்ததும், அனைவருக்கும் ஆச்சரியமே உண்டாயிற்று. கண்டக்டர் டிக்கெட்டை விஸ்வநாதனிடம் தந்து விட்டு, அவள் அருகே போய் காசுகளைப் பெற்றுக் கொண்டார். ரொம்ப தாங்ஸ் என்று கூறிய பிறகு, தனது இடத்தில் வந்து உட்கார்ந்தான் விஸ்வம். பஸ் ஒழுங்காக ஓட ஆரம்பித்தது. ஆனால் பிரயாணி களின் சிந்தனைதான் தடம் புரண்டு ஒடத் தொடங்கியது. 'இவளுக்கு என்ன இவ்வளவு அக்கறை ? இவள் யார்? அவனுக்கு வேண்டியவளாக இருப்பாளோ? இந்தக் காலத்துப் பெண்கள் ரொம்பவும் துணிந்துவிட்டார்கள். ரொம், ரொம்ப வேகமாக முன்னுக்கு வந்து கொண்டிருக்கிறார்கள்-இப்படி ஒவ்வொருவர் ஒவ்வொரு விதமாக எண்ணினர். . விஸ்வநாதன் மட்டும் அவளைப் பற்றி எண்ணாமல் இருப்பானா?. அவன் உள்ளத்திலும் அவளே நிறைந்து நின்றாள். அவள் துணிந்து உதவி புரிய முன்வந்திரா விட்டால், இப்பொழுதெல்லாம் அவன் ரோட்டில் நடந்து கொண்டிருக்கவேண்டும். நல்ல சமயத்தில் அவள் உதவி
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/27
Appearance