உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வரதன்.pdf/25

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

18 வரதன் அவைகளை அவ்வண்டியில் ஏற்றி, அங்குள்ள மக்களுக்கு வேடிக்கை காட்டிக்கொண்டிருந்தான். வரதன் அவ்வி டத்தினை அடைந்ததும் அங்கே நெடுநேரம் நின்று அவ் விநோதத்தைப் பார்த்து மகிழ்ந்திருந்தான். குரங்காட்டியின் வேடிக்கை முடிந்தது; பகற் பொழுதும் பெரும்பாலும் கழிந்தது. அப்போதுதான். வரதனுக்கு அச்சம் தோன்றியது. ஆ! நான் பாட சாலைக்குச் செல்லவேண்டுமே !’ என்பான் ; 'ஒ-இப் போது மணி நான்கிற்கு மேல் இருக்குமே!’ என ஏங்கி நிற்பான்; "ஐயோ! நான் எப்படி வீடு செல்வேன் 1: என்று உள்ளம் வருந்தி நாற்புறமும் சுற்றிப் பார்ப்பான். வரதன் இவ்வாறு வருந்திக்கொண் 4ఆఱ அங்கே கரிவேடக்காரர் இருவர் வந்தனர். அவ்விரு வரும் குடிமயக்கத்திலிருந்தனர். ஆதலின் அவர்கள், ஒருவர்மேல் ஒருவர் விழுந்துகொண்டு தள்ளாடித் தள் ளாடி நடந்து வந்தனர். அவ்விருவரும் கரியும் எண் ணெயும் கலந்து தங்கள் உடம்பு முழுவதும் பூசிக் கொண் டிருந்தனர். அவர்களில் ஒருவன் இடுப்பின் முன்புறத்தில் ஒரு பெரிய மணியினையும், பின்புறத்தில் ஒரு பழைய முறத்தினையும் கட்டிக்கொண் டிருந்தான். அவனை மற்ருெருவன் ஓர் உறுதியான தாம்பினுல் கட் டித் தன் இடக்கையில் பிடித்துக்கொண்டு மற்ருெரு கையில் ஒரு மூங்கிற் கழியினை வைத்துக்கொண் டிருந் தான். வரதனுக்குக் கரிவேடக்காரர் என்ருல் மிகுதியும் அச்சம். அவர்கள் வருவதைக் கண்டால் வீட்டிற்குள் ஒடி ஒளிந்து கொள்வான் : அல்லது தொலை தூரத்தில்,

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:வரதன்.pdf/25&oldid=891121" இலிருந்து மீள்விக்கப்பட்டது