உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:சிவஞானம்.pdf/8

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கத்தில் நுட்ப மேம்பாடு தேவை

சிவஞானம்

அல்லது

உயிர்களிடத்து அன்பு


குப்புசாமிப் பிள்ளையும் சிறுவரும்

வேனிற்கால விடுமுறையின் பொருட்டுப் பாட சாலைகள் யாவும் மூடப்பட்டன. அப்போது சிறுவர்களின் கொண்டாட்டம் கூறவொண்ணாது. அன்று, அவர்கள் தங்களுக்குக் கிடைத்த அவ்வோய்வு நாட்களை எண்ணி யெண்ணி இன்புறலாயினர். ஆதலால், அவர்கள் முகத்தில் களிப்புக் கூத்தாட ஆரம்பித்தது. அச்சிறுவர்கள் ஒட்டமும் நடையுமாய்ச் சென்று வீட்டை யடைந்தனர்; தங்கள் பழைய புத்தகங்களை யெல்லாம் பத்திரமாகப் பெட்டியில் வைத்தனர்; வெகு நாட்களாக எதிர்பார்த்திருந்த இவ்விடுமுறை நாட்களை எவ்வாறு கழிப்பது என முடிவில் எண்ண மிடலாயினர்.

ஒரு நாள் பகல் இரண்டு மணி யிருக்கலாம் ; ஒரு வீட்டின் தெருத்திண்ணையின்மீது சில சிறுவர்கள் உட்கார்ந்து இருந்தனர். அவர்கட்கு இடையே முதியவர் ஒருவர் அமர்ந்து இருந்தார். அவர் பெயர் குப்புசாமிப்பிள்ளை. அவர் சிறு வயதில் மிகத் தாழ்ந்த நிலமையில் இருந்தவர்; நல்லொழுக்கத்தாலும் விடா முயற்சி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:சிவஞானம்.pdf/8&oldid=1671826" இலிருந்து மீள்விக்கப்பட்டது