இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
கம் வந்து விட்டது. ஆதலால, நான உட்கார்ந்தபடியே தூங்கி விழுந்தேன். அவ்விதம் தூங்கும் போது நான் ஒரு சிறு கனவு கண்டேன். அது என்னவென்றால்-அதையும் சொல்லுகிறேன்-கேளுங்கள்.
நான் அந்தப் பொன் நாணயத்தைக் கடைக்காரனிடம் கொடுத்தேன்-கடைக்காரன் என் மேல் சந்தேகம் கொண்டான்-பிறகு தாணாக்காரனிடம் ஏதேதோ சொன்னான்-தாணாக்காரன் என்னைப் பிடித்துக் கொண்டான்-நான் அவனிடமிருந்து தப்பித்துக் கொண்டு- ஓடினேன்-உடனே, என் எசமானர் கோபத்துடன், 'அவனைப் பிடியுங்கள்-பிடியுங்கள்', என்று கத்தினார்-அப்போது நான் 'ஓ’ வென்று அழ ஆரம்பித்தேன்.
31