பக்கம்:காலம் தேடும் தமிழ்.pdf/137

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

135

185

சொற்சுவையினும் பொருளறிவே முக்கியம்

அதே சமயத்தில் அறிவியல் உண்மைகளை, தொழில்நுட்பச் செய்திகளைப் பொருத்தவரை எளிமை, தெளிவு ஆகியவற்றிற்குத் தரும் முக்கியத்துவம் போன்றே சொல்ல முனையும் அறிவியல் விஷயத்துக்கும் முதன்மை இடம் தர வேண்டியுள்ளது. இங்கு செய்திக்குத்தான் முக்கியத்துவமே தவிர சொற்களுக்கு அல்ல. சொல் நயத்துக்காக எக்காரணம் கொண்டும் பொருளை இழக் கக்கூடாது.

சிறுவர்க்கான மொழிபெயர்ப்பைப் பொருத்தவரை மற்று மொரு முக்கிய விஷயத்தில் கருத்தைச் செலுத்துவது அவசிய மாகும் ஒவ்வொரு குறிப்பிட்ட வயதுள்ள பருவத்தினரின் மூளை வளர்ச்சி, அப்பருவத்தினரின் அறிநதுணரும் திறன், அவர்கள் புரிந்துகொண்டிருக்கும் சொற்கள் ஆகியவற்றின் அடிப்படையி லேயே மொழிபெயர்க்க வேண்டுவது அவசியம். இதற்கான கலைச் சொற்கள கூட எளிய சொற்களாகவே அமைய வேண்டி யது அவசியமாகும். அப்போதுதான் சிறுவர் அறிவியல் தகவல் களை எளிதாக ஏற்று ஜீரணித்துக் கொள்ள முடியும்.

அறிவிய ல் மொழிபெயர்ப்பு

இதுவரை மொழிபெயர்ப்பின் வகைகளையும் முறைகளையும் பொதுவாகக் கண்டோம். இனி காலத்தின் மிகமிக இன்றி யமையா சிறப்பம்சமாகக் கருதப்படும் அறிவியல் மொழிபெயர்ப் பின் பல்வேறு கூறுகளை ஆராய்வோம்.

முதற்கண் ஒரு கருத்தை மனத்தில் அழுத்தமாகப் பதிய வைத்துக் கொள்ள வேண்டும் அதாவது மொழிபெயர்ப்பு மூலமே அறிவியல் தமிழை வளர்த்துவிட முடியாது; அறிவியல் உணர் வையும் அறிவையும் பெருக்கிவிட முடியாது என்பதை முதலில் நாம் புரிந்துகொள்ள வேண்டும்.

கடைவண்டி மொழிபெயர்ப்பு

நடக்க இயலாத குழந்தைக்குத்தான் நடைவண்டி தேவை. எழுந்து தானே நடக்கத் தொடங்கியபின், வளர்ந்துள்ள வாலிய நிலையிலும் நடை வண்டி தேவை எனக்கருதுவது நம் இயலாமை யைக் குறிப்பதாகவே அமையும். ஆனால், தமிழைப் பொருத்த வரை வாலிப நிலையை நோக்கி விரைந்து வளர்ந்து வந்தபோதி லும் இன்னும் சிறுவர் நிலையிலேயே இருப்பதாக மூல நூலாக