உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:மதிவாணன்.pdf/9

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

216 வி. கோ. சூரியநாராயண சாஸ்திரியாரியற்றிய (இரண்டாம்

ருெழிலாளரும் ஒருவித வொழுங்குமின்றிச் செறிந்து உரையா நிற்பார். கோட்டைக்கு வெளியே புறஞ்சேரிகளினும் பாக்கங்களிலும் இறுப்பார் பிறப் பொழுக்கங் குன்றிய பேதைமாக்களும், அறிவறைபோகிய அகங்கையாளரும், அரசன் விலக்கிய அரும்பிணியாளரும், களியாட்டயருங் கயவரும் ஏனைய தியருமே யாவார். அவர்களும் அரசன தாணேக் கடங்கியே கடப்பவரா யினும் ஒழுக்க விழிவுபற்றி வெளிப்படுத்தப்பட்டனர். இனி யாவற்றினுக்கும் காப்பண், தாமரைமலரிற் பொகுட்டென விளங்காகிற்கும் எம்பெருமான் மதிமுடிச் சொக்கன்கோயில்

இத்துணேச் சிறப்பினதாய அக்கூடலம்பதிப் போந்த அம்மழவிளங் குமரன் வையைசெல் வாயிலுற்று நகரினுட் செல்வான் கடைகாப்பார்க் குணர்த்தலும், அன்னர் ஒருவரும் புரவியேறியில்வழிப்போத லொண்ணுது. அதான்றியும் போருடைகரித்த அம்மைப் புகுமாறு சொல்லவும் வல்லால் லேம் ஆகலிற் பொறுத்தருள் புரிமின் விருப்பமேற் கீழ்த்திசை வாயிலாற் புகுமின்” எனவே மதிவாணன் தன் கலின மாவைத் திருப்பி விசையுடனுக் தலும் அது மாத்திரைப் போழ்தினின் மறைந்துவிட்டது.

உடனே பொழுது விடித்து நான்கு நாழிகை கழிந்தன வாதலின் கான ழிகை மணி முழங்கிற்று. அந்நேரம் யாற்றிடைக் கைகோத்துலாய அவ்விரு வரும் வாயில் காவலர்பாற் போந்து ஈண்டுப் போக்க குதிரைவிரன் யாண்டுச் சென்றனன்? விரைவினி னுாைமின் ' எனலும், அவர்கள் யாங்கள் தடுத்து ாைத்தமையிற் றிரும்பிச் சென்றனன். ஒருவேளை கீழைவாயிலாற் சென் நிருப்பினு மிருக்கலாம். மற்ற அதற்குமேல் யாங்களொன்று மறியோம்' எனப் புகன்றனர். புகலக் கேட்டாரிருவரும் பொருக்கெனப் புகுந்து போயி னர்.

மதிவாணனே புதுவர் புகுவாயில் சென்ற கோட்டைக் கடைகாவலர் பாற் போய் மத்திரியார் வாய்மையாளர் தம் இல்லஞ்செல்லும் விருப்பினேன். என்னைப் புகவிடுதிரோ?" என்ருன்; காவலர் "அற்றேற் புகுதுக” எனலுங் கடிதிற் போயின்ை. -

சிறிது நேரத்தினுள் வடக்கு மாசிவீதியின் கீழைப் பகுதியின்கண் உயர்ந்து குன்றெனத் தோன் றம் ஒருமாளிகைக் கலைக்கடை வந்துற்றது மதி வாணன்றன் பாய்மா. அன்னணம் பாய்மா வொன்று வந்து கிற்கக்கண்ட ஏவலாளரிற் சில்லோர் விரைந்து போக்து குதிரையைப் பிடித்துக் கோடலும் அதனின்றும் மதிவாணனிழியாமுன்னர்ப் பலர் பேசியதோர் பேரொலியுண் டாயிற்று. அஃதென்னெனத் திருமிகோக்கலும் காற்புறத்திலுமுள்ள மாக் தர் கிற்றலைக் கண்டு அஃதோர் வாழ்த்தொலியாதல் வேண்டு மென்லுங் கருத் துட னிழிந்து மாளிகையை நோக்கிச் சேறலும் எதிர்ப்பட்டார் ஒரு பெரியர். அவரை நோக்கி யெழுந்ததுபோலும் மேற்கூறிய அவ்வொலிதான். அப்பெரி

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:மதிவாணன்.pdf/9&oldid=655657" இலிருந்து மீள்விக்கப்பட்டது