உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:வல்லிக்கண்ணன் கடிதங்கள்.pdf/48

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

46 வல்லிக்கண்ணன்

புதுமைப்பித்தன் வரலாற்றை இந்தியிலும் இங்கிலீஷிலும் மொழிபெயர்க்க ஏற்பாடுகள் செய்யப்பட்டுவிட்டன என்பது தகவல். முந்திய கடிதத்தில், வாசகர்களும் விமர்சகர்களும் புத்தகத்தில், மேலட்டையில் ஆசிரியர் பெயர் அச்சிடப்படவில்லையே என்று கேட்டிருந்தீர்கள்.

பலரும் அதை குறையாகச் சுட்டிக்காட்டி எழுதுவது சகஜமாகிவிட்டது.

எழுத்தாளர்கள்-பத்திரிகைகள் புத்தகத்திலும் இதே குறைதான். ஆனால், சோலைத்தேனி பொறுப்பாளர் அதை குறைபாடாகக் கருதவில்லை. அவர்கள் வெளியீடுகளில் ஆசிரியர் பெயரை அட்டையில் அச்சிடாமல் இருப்பதை ஒரு பிரின்சிப்பிள் ஆகக் கொண்டிருக்கிறார்கள்.

12-1-88 சனியன்று நண்பர் கல்யாண சுந்தரம் இங்கே வீட்டுக்கு வந்து, பேசிக்கொண்டிருந்தார். அன்று இரவே தஞ்சாவூர் போவதாகச் சொன்னார். இதற்குள் பூரீவைகுண்டம் வந்திருக்கலாம். நான், என் அண்ணா, மற்றும் குடும்பத்தினர் அனைவரும் சுகம். நீங்களும் உங்கள் குடும்பத்தாரும் நலம் தானே? தீபாவளி வாரத்தில், ஆறேழு நாட்கள் தொடர்ந்து நல்ல மழை. இப்பவும் 3 நாட்களாக அடிக்கடி மழை பெய்கிறது.

அன்பு

{o}}. 5.

சென்னை.

j-2-93

அன்பு நண்பர் எழிலமுதன் அவர்களுக்கு,

வணக்கம்.

நலம் தானே? அகத்தியர் முதல் அப்புசுவாமி வரை நூல் வெளியீட்டு விழா சிறப்பாக நடைபெற்றதை அறிந்து மகிழ்கிறேன்.

விழா அழைப்பிதழ் வந்தது. விழா நிகழ்வு பற்றி தி.க.சி. எழுதியிருந்தார். நண்பர் கழனியூரனும் எழுதினார்.