வல்லிக்கண்ணன் கட்டுரைகள் 45
முக்கிய நிகழ்ச்சிகளையும், சமூக மாற்றங்களையும் பதிவு செய்வதும் சரித்திரத்தின் பணி ஆகும் என்ற கருத்து தோன்றி வலுப்பெற லாயிற்று.
மன்னர்கள் காலம் முடிந்துபோன பிறகு, நாட்டையும் மக்களையும் ஆளவந்தவர்களின் போக்குகளையும் தன்மை களையும், அவற்றால் பாதிக்கப்பட்ட மக்களின் நிலைமைகளையும் பதிவு செய்யவேண்டியது சரித்திரத்தின் கடமை ஆயிற்று.
அவற்றை ஆதாரமாகக்கொண்டு, கற்பனையையும் கலந்து வரலாற்றுநாவல்கள் புனையும் முயற்சிகள் தோன்றி வளர்வதும் காலவகை ஆயிற்று.
இந்த ரீதியில் தமிழிலும் படைப்புகள் தோன்றியுள்ளன. வரலாற்றுநிகழ்வுகளையும், அவற்றினால் சமூகத்தி ஏற்பட்ட தாக்கங்களையும், மக்களின் வாழ்க்கை பாதிக்கப்பட்ட விதங் களையும் நாவலாக எழுதும் முயற்சிகள் அவ்வப்போது மேற் கொள்ளப்பட்டிருப்பது மகிழ்ச்சிக்கு உரியதாகும்.
இந்திய விடுதலைப்போராட்ட காலத்தையும், விடுதலைக்குப் பிந்திய காலகட்ட பாதிப்புகளையும் வைத்து அதிகமான நாவல்கள் - சமூகவரலாற்று நாவல்கள் எழுதப்பட்டிருக்கவேண்டும். ஆனால் தமிழ் எழுத்தாளர்களின் கவனம் வெகுகாலம்வரை இத் திக்கில் செலுத்தப்படவில்லை என்பது ஒரு குறைதான். ஆயினும், குறிப்பிடத்தகுந்த சில முயற்சிகள் இவ்வகையிலும் பிறந்துள்ளன என்று சொல்லலாம்.
கல்கி ரா. கிருஷ்ணமூர்த்தியின் அலை ஓசை’ நாவல் இவ்வகையில் எழுதப்பட்ட முதல் முயற்சி ஆகும். சுதந்திரப் போராட்ட காலம், விடுதலை இயக்கத்தில் ஈடுபட்ட இலக்கிய வாதிகளின் செயல்கள், அவர்களும் அவர்களது குடும்பங்களும் பாதிக்கப்பட்ட தன்மைகள், அவர்களின் உறவுகள், உணர்வுச் சிக்கல்கள் முதலியன இந்நாவலில் சித்திரிக்கப்பட்டுள்ளன.
ம.சி. கல்யாணசுந்தரம் எழுதிய இருபது வருடங்கள். இதில் முதல் பகுதி விடுதலைப் போராட்ட கால அனுபவங்களை நன்கு விவரிக்கிறது. பிற்பகுதி, போராட்டத்தில் ஈடுபட்டிருந்த ஒரு டாக்டர் எங்கோ ஒரு தீவுக்குப் போய் வாழ்ந்து பெற்ற அனுபவங் களையும், அவர் தாய்நாட்டுக்குத் திரும்பிவந்ததும், தான் கற்ற புதிய சிகிச்சைமுறையைப் பிரபலப்படுத்துவதில் காட்டுகிற உற்சாகத்தையும் விவரிக்கிறது.
வல்லிக்கண்ணன் எழுதிய வீடும் வெளியும் சுதந்திரப் போராட்ட கால நிகழ்வுகளையும் உணர்ச்சி வேகத்தால் அவற்றில் ஈடுபட்ட மாணவர்களின் இயல்புகள், வீட்டுச் சூழ்நிலைகள், இவற்றால் அவர்கள் பாதிக்கப்பட்ட விதங்களையும் உணர்ச்சி கரமாகச் சித்திரித்துள்ளது. அப்படி உணர்ச்சி வேகத்தோடு