శ 2 6 | காதலுக்குமுண்டோ கடன்? | பண்ணினாள் என்ற நன்றியுணர்வு தலை தூக்கியது. 'மற்றவங்க கஷ்டப்படுவதைப் பார்த்து ரசித்துக் கொண்டிருக்கிற மனோபாவம்தான், எல்லாரிடமும் வளர்ந்து வருகிறது. இந்தப் பெண் அப்படியில்லை. இவள் நல்ல வள்' என்று அவன் உள்ளம் பாராட்டிக் கொண்டிருந்தது. அவன் இறங்கவேண்டிய இடம் வந்து சேர்ந்தது. ஒன்றரையனா ஜீரணமாகிவிட்டது என்று முனகியவாறே பஸ்ஸை விட்டுக் கீழே இறங்கினான் விஸ்வம். மறுபடியும் அவன் திகைப்படைய நேர்ந்தது. அந்த யுவதியும் அங்கே தான் இறங்கினாள்! பஸ் ஸில் இருந்தவர்களில் பலரது கண்கண் அவனையும் அவளையும் மாறி மாறிப் பார்த்தை, அவன் கவனிக்காமல் இல்லை. ஆனால் அவள் யாரையும், அல்லது எதையும் பற்றிய சிந்தனையில்லாதவளாய், நிமிர்ந்த தலையும் நேர் நோக்கும் கொண்டு நடந்தாள். - பஸ் நகர்ந்து ஓடிய பிறகு, விஸ்வநாதன் வேகமாக அவள் அருகே சென்றான். "நீங்கள் செய்த உதவிக்கு மிக நன்றி. கொஞ்சம் இங்கேயே நிற்கிறீர்களா? அந்தக் கடையில் சில்லறை மாற்றி வந்து, ஒன்றரை அனாவை." என்று தொடங்கினான். அவன் வளர்ப்பதற்குள் பேச்சை முடித்து விட்டாள். "பரவாயில்லே! நீங்கள் திரும்பத் தரணும்கிற அவசியம் எதுவுமில்லை” என்று அவள் சொன்னாள். அவனைப் பார்த்து அவள் சிரிக்கவுமில்லை; மேலும் பேச வேண்டும் என்று ஆர்வம் காட்டவுமில்லை. அவள் பாட்டுக்கு நடந்து கொண்டே இருந்தாள். 'இவள் போக்கு விகித்திரமாகத்தான் இருக்கிறது என்று நினைத்தான் அவன். சற்று நேரம் அவளையே பார்த்துக் கொண்டிருந்தான். அவன் அவ்விதம் தன்னையே பார்த்தபடி நிற்பான்
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/28
Appearance