மீனு என்ற மீனுக்குட்டி என்கிற மீனாம்பாளுக்கு நான்கு வயது தான் ஆகிறது. அந்த வீட்டில் அவளுடைய ஆளுமை வெகு சிறப்பான ஒன்றாக விளங்கியது. ட்டி) அவளைப் பற்றி அவள் பாட்டிக்குப் பெருமை. அப்பாவுக்கு அபாரப் பெருமை. அம்மாவுக்குப் பெருமைஐயோ! w மீனுக்குட்டி என் தங்கக்கட்டி, என் செல்லக்கண்ணு' என்று அம்மா வாய் மணக்க, நா இனிக்க, மனம் குளிரப் பேசாத நேரம் கிடையாது என்று சொல்லிவிடலாம். பாட்டி பார்வதி அம்மாளுக்கோ பேத்தியைக் கொஞ்சுவதும், தூக்கிக் கொண்டு அலைவதும், எங்க ராசாத்தி மீனம்மா இன்னிக்கு என்ன செய்தாள் தெரியுமா? என்று ஆரம்பித்து, அவளது புரவோலத்தை எடுத்துச் சொல்வதும் தவிர, வேறு வேலை எதுவும் இல்லை என்றே தோன்றும். ‘எங்க மீனு மகா சமர்த்து, வருங்காலத்திலே அவள் பெரிய டாக்டரா வரப்போறாளாக்கும், அப்படியாக்கும் இப்படியாக்கும்! என்ற ரீதியில்தான் ஒலிக்கும் அவள் அப்பாவின் பேச்சு. மேளம் கொட்டினால் பூசாரி ஆடுகிறான். உற்சாகப்படுத்தினால் குரங்கு கூத்தாடுகிறது. தட்டிக் கொடுப்பது போல் பேசி, செல்லம் கொண்டாடினால் குழந்தை சும்மாவா இருக்கும்? மீனுக் குட்டியும் இஷ்டம் போல் செயல் புரிந்தாள். பெரியவர்கள் பார்த்து மகிழ்ந்து ஊக்கம் அளித்தார்கள். சிரித்துப் பாராட்டினார்கள்.
பக்கம்:வல்லிக்கண்ணனின் மணியான கதைகள்.pdf/15
Appearance