உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நினைவுச்சரம்.pdf/39

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

呼可毯 39

பிறவிப்பெருமாள் பேச்சோடு பேச்சாகச் சொன்ன இந்த விவரமும் மன. பென. மனசில் கனத்துக் கிடந்தது. -

மயிலேறும் பெருமாள் உள்ளத்தில் கோயில் கொண் டிருந்த சிவபுரம் சொர்க்கப் பசுமையோடு ஜிலுஜிலுத்தது. அவர் நாற்பது வருஷங்களுக்கு முன்பு விட்டுச் சென்றிருந்த கிராமத்தை - தன்னிறைவு பெற்றிருந்த, வளங்களும் வசதி களும் கொண்டிருந்த, இதம் தரும் இனிய சூழ்நிலயை - இப்போதும் அப்படியே தரிசித்து மகிழமுடியும் என்று எண்ணி யவர் அல்லர். ஆயினும் இன்று எதிர்ப்படும் ஏமாற்றங்களும் மோசமான சீர்குலேவுகளும் அங்கு மண்டி வளர்ந்திருக்கும் என்று அவர் ஒருநாள் ஒரு பொழுதேனும் எண்ணியதுக்டிட இல்லே.

அவர் நினேவில் நித்தியப் பசுமையோடு நிரந்தர இளமை இனிமைகளோடு குடியிருந்த சிவபுரத் தோற்றம் அடியோடு ஆட்டம் கொடுத்துவிடும்படியாக அதன் இன்றைய எல்லேக் காட்சிகள் வெறிச்சென உணர்த்துவதை மனு. பெனு ரயிலில் வந்து இறங்கியபோதே பூரணமாகப் புரிந்து கொள்ள இயல வில்லே-அவர் இரவு பத்து மணி வண்டியில் வந்து இறங்கிய தால், இருட்டில் இரண்டு மைல் தூரம் ஊருக்கு நடந்து தான் போக வேண்டும் என்று எண்ணியவாறு ரயிலே விட்டு இறங்கி யவருக்கு, ரோட்டிலே 'டவுன் பஸ்’ வந்து அருள் புரிந்தது மகிழ்ச்சியையே கொடுத்தது. இருட்டில் பஸ் வேகமாக ஒடிய போது, பஸ்ஸினுள் மத்தியில் ஒரு இடத்தில் உட்கார்ந்திருந்த பிள்ளேக்கு பாதை நெடுக மாறுதல் ஏற்பட்டிருக்கு என்ற உணர்வு படர்ந்ததே தவிர, அது எத்தகைய இடித் தாக்குதல் என்பது மறுநாள் காலே வரை புலனாகவேயில்லே.

அதிகாலேயில் ஐந்து மணிக்கே எழுந்து அவர் ஆற்றுக்குப் போய்விட்டார். கிருஷ்ண பட்சத்து நிலவு, வைகறைப் போதில், மனேகரமாக எங்கும் வெள்ளிமுலாம் பூசியிருந்தது. 'நிலா பட்டப்பகல் போலே அடிக்குது. இந்த அழகை ரசிக்க துக்கு யாரு இருக்கிருங்க?' என்று பிள்ளேயின் மனம் கூறிக் கொண்டது. - -

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:நினைவுச்சரம்.pdf/39&oldid=589283" இலிருந்து மீள்விக்கப்பட்டது