உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:லேசர் அறிவியல்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

19 இதயம் பார்ப்பதற்கு இலேசர் தொகுதி எளிய அமைப்பாகத் தோன்றலாம். ஆனால், அதன் பகுதிகளின் தன்மை, துல்லியம் ஆகியவற்றிற்கு முன்னேறிய தொழில் நுணுக்க அறிவும், உற்பத்தித்திறனும் தேவைப்படுகின்றன. இலேசரின் இதயமான கண்ணாடி நுண்குழாயில் ஊடுபொருள் இருக்கும். இது உயர்ந்த வகைக்கண்ணாடிக் குழாய். இதன் துளை மிக நேரானதாகவும், சுவர்கள் மிகத் தடித்ததாகவும் இருக்க வேண்டும். அவ்வாறு இருந்தால்தான், முனைத்தாங்குதல்களுக்கிடையே தொய்வு துளிகூட இராது. இத்தகைய உயரியநுண்குழாய்களை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்யவேண்டியுள்ளது. விளக்கும் சாளரமும் சிவப்புக்கல், நியோடைமியம் முதலிய திண்ம இலேசர்கள் செனான் ஒளிவீசு விளக்கினால் இயங்குகின்றன. இவ்விளக்கு, இலேசர் பொருளைச் சுற்றி அமைந்ததாகும். இவ்விளக்கினை நாம் மேனாடுகளிலிருந்தே இறக்குமதி செய்ய வேண்டியுள்ளது. ஆனால், பிளினியில் உள்ள மைய மின்னணுப் பொறி இயல் ஆராய்ச்சி நிறுவனம் ஒரு விளக்கினை உருவாக்கியுள்ளது. இது மேலும் பல விளக்குகளை உருவாக்கும். அடுத்துக் குழாயில் இரு முனைகளிலுமுள்ள தனிச்சாளரத்தின் வழியாக, ஒளிக்கற்றைச் செலுத்தப்படுகிறது. இது புரூய்ஸ்டர் சாளரம் எனப்படும். அதன் முகங்கள் மிகத் துல்லியமான ஒரு போக்குவேறுபாட்டில் பொருத்தப்பட்டுள்ளன. (ஒரு வில்லின் 6 செகண்டுகளுக்குத் குறைவான ஒரு போக்கு வேறுபாட்டில் அதன் இரு முகங்களும் மிகத் துல்லியமாகப் பொருத்தப்பட்டுள்ளன) இலேசர் கதிர்வீச்சு எந்த மறிப்பு இழப்பும் ஏற்படாத கோண அளவில் முகங்கள் செங்குத்துமட்டத்தில் அமைந்துள்ளன. அவ்வாறு செல்லும்பொழுது இலேசர் கற்றை முனைச்செயல்படுகிறது. இந்திய அறிவியல் நிறுவனத்தைச் சார்ந்த சிஐஎஸ்எல் படிகக்கல் புரூய்ஸ்டர் சாளரங்களை அமைக்கவல்லது.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:லேசர்_அறிவியல்.pdf/30&oldid=886980" இலிருந்து மீள்விக்கப்பட்டது