29 மூவகை வழிகாட்டிகள் அமைக்கப்படலாம். 1. தட்ட வகை 2. மின்தடை வில்லைகள் 3. வளிவில்லை மற்றொரு முறை முழு உள் மறிப்புடைய உட்குழிவான கண்ணாடி இழைகளில் இலேசர் ஒளிக்கற்றையினை அனுப்புதல் ஆகும். பனி உண்டாகும் மட்டத்திற்கு மேல், அதிக உயரங்களில் செல்லும் வான வெளிக்கலங்களில் இலேசர் ரேடார்களைப் பயன்படுத்தலாம். இப்போது அதன் பரவலில் இழப்பு ஏற்படுவதற்கில்லை. கணிப்புப் பொறிகளில் திண்மக் கடத்திகளுக்குப் பதிலாக இலேசர்களைப் பயன்படுத்தலாம். மேலும், இலேசர் ரேட்ார்கள் நில நிலாக்களை அறியவும் பயன்படுகிறது. தொலைநோக்கி வழியாக இலேசர் ஒளிக்கதிர் வாணவெளியில் வலம் வரும் நிலாவிற்கு அனுப்பப்படுகிறது. மறிக்கும் அடுக்கு நிலாவில் இருப்பதால், இக்கற்றை மீண்டும் புவிக்கு அனுப்பப்படுகிறது. இது ஒளிப் பெருக்கியால் பெறப்பட்டுக் கண்டறியும் திரையில் ஒரு துடிப்புக்குறியை உண்டாக்குகிறது. ஒப்பு நோக்குத் துடிப்புடன் இதைப் பார்க்க உடன் நிலாவின் இருப்பிடத்தை அறியலாம். இலேசரால் வழிப்படுத்தப்படும் எறிபடைகள், குண்டுகள் ஆகியவற்றில் இந்நெறிமுறை பயன்படுகிறது. இலேசர் எக்கி(பம்ப்) ஒளியில் இது முப்பருமன்களில் குவிக்கும் இலேசர் ஆகும். அமெரிக்க வெஸ்டிங்கவுஸ் ஆராய்ச்சிக்கூடங்களில் ஒளிப்பந்து ஒன்றினைப் பயன்படுத்தி இலேசர் கோலினை எல்லாத்திசைகளிலிருந்தும் நனைத்தனர். இதனால் இலேசர், திறனுள்ள ஆற்றலைப் பெற்றது. இதில் ஏற்றுகுழாய் ஒன்று இலேசர் கோலினைத் தூண்டுவதற்கு வேண்டிய ஒளியாற்றலை வழங்குகிறது. ஒளியாற்றல் வழக்கமாகப் மறிப்பானுக்குள் வைக்கப்பட்ட விளக்கிலிருந்து வரும் மறிப்பான் ஒளியினை இலக்குக்குச் செலுத்துகிறது.
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/40
Appearance