24 இலேசர் தொலைக்காட்சித் தொகுதி இது அமெரிக்க வானொலிக் கழகத்தினால் அமைக்கப்பட்டுள்ளது. இஃது இரு அலகுகளைக் கொண்டது. ஒன்று புதிய தொலைக்காட்சிப் புகைப்படப்பெட்டி. இது அதிக ஆற்றல் வாயந்தது. சிற்றுண்டிப் பெட்டகம் போல் இருக்கும். இது செயற்கை நிலாவில் பொருத்தப்படுவது. மற்றொன்று செய்திகளைப் பெறும் இலேசர் கருவி. இது புவியில் அமைந்திருப்பது. ஒளிப்படத்தைத் தனது செறிவான குறுகிய ஒளிக்கற்றை அலகிடுவதன் வாயிலாக உள்வரும் உருக் குறியீடுகளை படமாக்குகிறது. இங்கு இலேசர் கற்றை ஒலி ஏற்றுச்செல்லும் வானொலி அலைகளாக மாற்றப்படுகிறது. ஆகவே, அது உள்வரும் எல்லா உருச் செய்திகளையும் பெற்று ஒளிப்படக்குழம்பில் பதிவு செய்கிறது. படத்தின் விளக்கமும் பத்து மடங்கு அதிகமாக இருக்கும். இலேசர் ஒளியின் இயல்பால் அமைந்த அளப்பரிய செய்தி ஏற்றுச் செல்லும் திறனால், இவ்வதிகரிப்பு ஏற்படுகிறது. கொள்கை அளவில் ஒரே சமயத்தில் 10 இலட்சத்திற்கும் மேற்பட்ட தொலைக்காட்சி வழிகளில் செய்திகள் செல்ல இயலும், இலேசர் உருப்பதிவி வினாடிக்கு 1200 வரிகள் வீதம் படங்களை உண்டாக்குகின்றது. அதாவது, கிட்டத்தட்ட ஐந்து வினாடிக்கு ஒரு படமாகும். முன்னேறிய தானியங்கு படம் அனுப்பும் கருவியின் முன்னோடி இந்த இலேசர். இவ்வகை அனுப்பும் கருவி அமெரிக்க டிராஸ், ஈசா வானிலை நிலாக்களில் படங்கள் எடுக்கப்பயன்படுகிறது. மேகக் கூட்டங்களின் இப்படங்கள் 500-600 வரிப்படங்களாகப் பெறப்படுகின்றன. இந்த இலேசர் அலகும் அதனோடு தொடர்புடைய மின்னணுத் தொகுதியும் இரு அலுவலக மேசைகளுக்குரிய இடத்தில் பொருத்தப்படக் கூடியவை. இதனை ரூ.37.5 இலட்சம் செலவில் அமைக்க இயலும், . 3 . ۷ه ع
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/35
Appearance