2. பேராசிரியரின் பெரும்பணி அடுத்துப் பேராசிரியர் ஆல்பிரட் கெஸ்லர் என்பார் 1950-ல் ஒளிப்பாய்தல் பற்றிய தம் நூலினை வெளியிட்டார். ஒளிப்பாய்தல் என்பது ஒர் அரிய மெய்ந்நிகழ்ச்சியாகும். இதில் வீறுள்ள இலேசர் அணுக்கள் ஒளிவீசு விளக்கினால் தூண்டப்படுகின்றன. இத்துறையில் ஆற்றிய அரும்பணிக்காக இவருக்கு 1966-ல் நோபல் பரிசு கிடைத்தது. மேசர், இலேசர் ஆகியவற்றின் இயற்பியல் கொள்கையினை அறியவும், அவற்றின் வளர்ச்சியினை மேம்படுத்தவும் இவர்தம் பணி பெரிதும் உதவுகிறது. புனைவு 1952-55-ஆம் ஆண்டுகளுக்கிடையில் கிளர்வு வெளியேற்றக் கொள்கையின் இயல்பினை அறிய முதல் ஆய்வுகள் செய்யப்பட்டன. அமொரிக்காவில் கொலம்பியா பல்கலைக்கழகத்தைச் சார்ந்த டாக்டர் சார்லஸ் எச். டவுனிசும் அறிவார்ந்த பெல் ஆய்வுக்கூடத்தைச் சார்ந்த ஆர்தர் எல். ஷாலோவும் உருசியாவில் இயற்பியல் அறிஞர்கள் அலெக்சாண்டர் புரோக்கரோவும், நிகோலய் பாசவும், துகள் பிறப்பிகள், பெருக்கிகள் ஆகியவை பற்றிய கொள்கையினைத் தாங்கள் செய்த ஆய்வுகளினால் உருவாக்கினார்கள். சிப்ப மின்னணு இயலில் நிகழ்ந்த இப்புதிய கண்டுபிடிப்பிற்காக, ஆர்தரைத் தவிர ஏனைய முவருக்கும் 1964-ல் நோபல் பரிசு கிடைத்தது. ஆக, இம் மூவரது அரிய ஆராய்ச்சியினால் மேசரும், இலேசரும் 1954-ல் புனையப்பட்டன. இவை தனி ஒருவரது கண்டு பிடிப்போ புனைவோ அன்று, மாறாகக் கூட்டுக் கண்டுபிடிப்பும் புனைவும் ஆகும். சாவுக்கதிர்கள் 1959-ல் ஒரு வகைப் பண்படாச் சாவுக்கதிர்களை அமெரிக்கர்கள் உண்டாக்கினர். இவை மின்காந்த அலைகளாகும். இவற்றைக் கொண்டு பல ரீசஸ் குரங்குகள் கொல்லப்பட்டன. அவை இறப்பு அறுவை செய்யப்பட்ட பொழுது, சாவுக்கு எவ்வகை நோய்க்காரணமும்
பக்கம்:லேசர் அறிவியல்.pdf/13
Appearance