இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது
7
திருந்ததைக் கண்டு தன் வீட்டுக்கே அதை எடுத்துச் சென்றான்.
சிறகு ஒடிந்த அந்தக் கொக்குக்குத் தன் வீட்டில் சிகிச்சை அளிக்கத் தொடங்கினான் ஏழை. அது தனது இறகுகளை நன்றாகப் பயன்படுத்தத் தெம்பு ஏற்படும் வரை பேணிப் பராமரித்து வந்தான். பிறகு ஒரு நாள் அந்தப் பறவை பறந்து போய் விட்டது.
அந்த ஏழைக் குடியானவன் உழவு வேலையை முடித்து, விதைப்பு ஆரம்பித்த போது, அந்தக் கொக்கு மறுபடி அவனது கழனி மீது பறந்து வந்தது. மூன்று முலாம்பழ விதைகளைக் கீழே போட்டது. அவன் அங்த விதைகளைப் பொறுக்கித் தனது நிலத்தின் ஒரு கோடியில் விதைத்தான். சில நாள்களிலேயே அவை முளை விட ஆரம்பித்தன. அந்த ஏழைக் குடியானவன் அயர்வின்றிக் களையெடுத்தான். செடிகளுக்கு நீர் பாய்ச்சினான். சீக்கிரம் முலாம் பழங்கள் கனிந்து கிடந்தன.