புலவர் சுந்தர சண்முகனார்
131
காய்களின் வரலாற்றினையே ஒருமுறை சுருங்கப் பார்த்துவிட்டோமே. பல கருத்துக்களை உள்ளடக்கிக் கொண்டிருக்கும் அந்தப் பழமொழி வாழ்க!
அத்தியைப்போல மக்களினமும் கலந்து குழுவாக வாழ்வதே சிறந்த வாழும் நெறியாகும்.
பெருகி வரும் மக்கள் தொகைக்குப் போதிய உணவு அளிக்க வேண்டும். மக்கள் பெருகுவதற்கேற்ப நிலமும் பெருகுவதில்லையே. எனவே, இருக்கும் நிலத்திலேயே விளைச்சலைப் பெருக்க வேண்டும். இதற்காக இந்த இருபதாம் நூற்றாண்டில் விஞ்ஞான முறையில் என்னென்னவோ முயற்சிகள் மேற்கொள்ளப்படுகின்றன. இதற்கென்று அரசாங்கத்தில் தனித் துறையே - தனி அலுவலகங்களே உள்ளன.
“பழைய முறையில் உழக்கூடாது; எந்திரக் கலப்பை கொண்டு உழ வேண்டும். விதைகள் இத்தகையனவாய் இருக்க வேண்டும். சப்பான் முறையில் நட வேண்டும். இன்ன உரம் போட வேண்டும். பயிரைப் பூச்சிகள் அழிக்காமல் இன்னின்ன வகையில் காக்க வேண்டும்” என்றெல்லாம் தொழில்துறை வல்லுநர்களால் அறிவுரைகள் அள்ளி வழங்கப்படுகின்றன. இவற்றுள் முதல் அடிப்படை வேலையாகிய உழுதல் தொழிலைப் பற்றி மட்டும் இக்கட்டுரையில் ஆராய்வோம்: