ரா. இராகவய்யங்கார்
35
யாட்டியைத் தங்குலத்தவளாகக் கொள்ளுதல் கண்ணகியை “எங்கோ மடந்தை” என இளங்கோவடிகள் வாழ்த்துக் காதை இறுதியிற் கூறிக் காட்டலானறிக. வேள் என்பது ஈண்டுக் கூறிய குயக்குல நற்பெண்டிர் வரலாற்றிற்கியைய, அஸிரிய நாட்டுப் பழமொழியில் பாளைக்குப் பெயராதலும் கோக்கிக் கொள்க.
இக்கற்புடை வேட்கோப் பெண்டினின்று வேள் என்னும் பெயர் விருதாகப் புனையப்பட்டு அதுவே நாளடைவில் அரசுக் குடிபெயராயினதென்று பொருத்தங் கூறலாமெனினும் உண்மை பார்வதியாகிய ஸதீபுத்ரன் வேள் என்ற வரலாற்றின் கண்ணே தான் உள்ளதென்று. கருதுகின்றேன்.
காஷ்மீரமே வேளிர் வதிதல் இடம்
மிகவும் பழமையான பாரஸீக மொழியில் வேள் (wail) என்னும் பெயர் தமிழ் வழக்கொடு மாறுபடாமற் பிரபுக்களுக்கும், ராஜகுலத்தவர்களுக்கும் வழங்குதல் காண்பது பெருவியப்பைத் தருவது, மேல் நாட்டும் தென்னாட்டும் இவ்வேளென்னும் பெயர் இப்படி ஒத்த பொருளில் வழங்கற்கு மூலம் ஆதிவராஹ மூலத்வாராவையுடைய துவாரவதி நாடாகிய காஷ்மீரத்தை ஆண்டு வந்த மக்கள் குலமே என்க.
இவற்றிற்கியைய இக்காஷ்மீர நாட்டு நீலநaக குண்டத்தை “வேணாடு” என வழங்குவதும் பத்மநாகன் இருக்கும் பத்ம ஸரஸுள்ள இடத்தை வெளுர் என வழங்குவதும் விதஸ்தா நதியை வேள் எனக் கூறுவதும் நூல்களிற் கண்டு கொள்க.
காஷ்மீர ராஜ பரிவாரத்தில்.வேளாவிட்டா எனப்பெயர் சிறப்பாக உண்டென்றும், இவனைத் தகுதி பற்றிப் பெருவேந்தன் மண்டலேசனாக்குவது வழக்கமென்றும்