பக்கம்:பாரதிதாசன் தாலாட்டுகள்.pdf/30

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

28

பாரதிதாசன்


என்னுடைய இன்னமுதே
இராகவனே தாலேலோ.

பாராளும் படர் செல்வம்
பரதநம்பிக் கே அருளி
ஆரர் அன் பிளையவனோடு
அருங்கானம் அடைந்தவனே
சீராளும் வரைமார்பா
திருகண்ண புரத்தரசே
தாராளும் நீள்முடி என்
தாசரதீ தாலேலோ.

இந்தப் பாடல்களில் ஈடுபடாதோர் யார்?

பின்வந்த கவிஞர்களுடைய புதிய பிரபந்த வகைகளில் ஒன்றான பிள்ளைத்தமிழ் என்ற பிரபந்தத்தில் 'தாலாட்டுவதையே அப்பருவத்துக்குரிய பொருளாகக் கொண்டார்கள். இதுவுமின்றி, தெய்வங்கள் மீதும் 'தாலாட்டு' என்ற பெயரோடு பாடப்பெற்ற நூற்றுக்கணக்கான தாழிசைகளைக் கொண்ட பிரபந்தங்கள் பின்னர்த் தோன்றியிருக்கின்றன. இவ்வளவையும் ஒருபுடை தழுவி, நாடோடிப் பாடலாகவும் வாய்மொழியாகவும் நம் தாய்மார் நாவில் வழங்கும் தாலாட்டுப் பாடல்களுக்குக் கணக்கில்லை.

இவ்விதமாக, தாம் தாயாயிருந்து முழுமுதற் பொருளான இறைவனையே குழந்தையாக ஏந்தியெடுத்துக் தாலாட்டுப் பாடி, அதன் மேல் அடியவர் உள்ளமெல்லாம் அன்புவெள்ளம் கரை கடந்தோடவும், தமிழ் இலக்கியம் பல துறையிலும் விரிந்து வளரவும் செய்து புதுவழி வகுத்த