உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/23

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

தோரணவாயில் # 5 + தண்ணிருக்குப் பயந்து தண்ணிர் இல்லாக் காட்டில் (செட்டிநாட்டுப் பகுதி) குடியேறினர் போலும் என்று ஏன் அரிய கெழுதகை நண்பர் அமரர்-கம்பன் அடிப் பொடி சா.கணேசன் அவர்கள் அடிக்கடிச் சொல்லி வருவ தைக் கேட்டு மகிழ்ந்ததுண்டு. காவிரிப் பூம்பட்டினத்திலிருந்து வந்தவர்கள் பட்டி னத்தார் (பட்டினத்தடிகள், பட்டினத்தார் என்ற பெயர் களுடன் குழப்பும் ஏற்படாமல் இருக்கும் பொருட்டு) தங்களை நகரத்தார் என்று வழ்ங்கிக் கொண்டனர் போலும். நூலுள் காணப்ப்ெறும் சில சொற்களும் இவர் கள்ை நாட்டுக் கோட்டை நகரத்தார் என்று பறை சாற்றிக் கொண்டுள்ளன. தவிர இக்குலத்தவர் மட்டிலுமே மலே சியா, சிங்கப்பூர், பர்ம்ா முதலிய அயல்நாடுகட்குச் சென்று வாணிக்ம் செய்து விடுகின்றனர்." பட்டினத்த்டி கள் திரைகடல் ஒடியும் திரவியும் தேடு' என்ற முதுமொ ழிக்கிணங்க கடல் வாணிகம் செய்து வந்ததையொட்டி தாமும் அதனைத் தம் குலத் தொழிலாகக் கொண்டு அவ்வாறு செய்து வருகின்றனர் போலும் என்று கருத வும டந் தருகின்றது. ಶ್ವಿನ್ಡಲ್ಲಿ இக்குலத்தார் மலேசியா, சிங்கப்பூர் பான்ற வெளிநாடுகளில் வாழ்ந்து வருவதையும் கருதலாம். வேறு செட்டி இனத் தைச் சேர்ந்தவர்கள் இவ்வாறு அயல்நாடுகட்குச் சென்று வாணிகம் செய்ததாக வரலாறு இல்லை என்ப தும் ஈண்டுச் சிந்திக்கத்தக்கது. இன்னொரு செய்தியும் ஈண்டு கருதத்தக்கது, நகரத் தார் குலத்தில் இளையாற்றங்குடிக் கோயிலில், அரும் பார்க்கிளையார் என்ற பிரிவினர் பட்டினத்தார் வழி வந்தவர்கள். ஆனதால் பட்டினத்தார் காலத்திற்குப் பின் னர் தங்களுக்கு ‘அரும்பார்க் கிளையாரான பட்டணச் சாமியார்’ என்று கோத்திரப் பிரிவு சூடிக் கொள்வராயி னர். இச்செய்தியும் பட்டினத்தடிகள் நகரத்தார் குலத் தைச் சார்ந்தவர் என்ற உண்மைக்கு அரணாக அமைகின் றது. 5. பட்டினத்தடிகள் வெளிநாடுகளில் கப்பல் வாணிகம் நடத்தி வந்ததாக வரலாறு.