உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பட்டினத்தடிகள்.pdf/29

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பட்டினத்தடிகள் வாழ்க்கை வரலாறு # 11 + பார்த்தவுடனேயே உண்மை ஞானம் கைவரப் பெற்று அக்கணமே பாரனைத்தும் பொய் என்று துறந்தார். மெய்ஞ்ஞான உணர்ச்சி மிகுந்த பாடல்கள் அவரிடமி ருந்து மழை வெள்ளம் போலப் பிரவாகம் எடுத்து வரத் தொடங்கின. வாதுஉற்ற திண்புயர் அண்ணா மலையார் மலர்ப் பதத்தைப் போதுற்ற போதும் புகலுநெஞ் சே:இந்தப் பூதலத்தில் தீதுஉற்ற செல்வம்என் தேடிப் புதைத்த திரவியம்என் காதுஅற்ற ஊசியும் வாராது காணும் கடைவழிக்கே என்பது போன்ற பாடல்கள் பாடினார். இவர்தம் ஆணையின்படி செல்வத்தைத் தருமம் செய்த சேந் தனை அரசன் சிறை செய்து பின்னர் இவர்தம் பெரு மையை உணர்ந்தான். சின்னாட்களில் இவர்தம் அன் னையார் சிவப்பேறு அடைந்தபோது இவர், முந்தித் தவம்.கிடந்து முந்நூறு நாள்சுமந்தே அந்தியக லாச்சிவனை ஆதரித்துத் - தொந்தி சரியச் சுமந்துபெற்ற தாயார் தமக்கோ எரியத் தழல் மூட்டுவேன். என்பது முதலான பாடல்கள் பாடித் தாயாரின் திரு மேனியை ஞானாக்கினியால் எரியூட்டினார். பின்னர் திருவிடை மருதுரில் தங்கி அங்கிருந்து பல தலங்களுக்கும் சென்று இறைவர்களைச் சேவித்தார். அக்காலத்தில் இவர் பாடிய பாடல்களும் நிகழ்த்திய அற்புதங்களும் மிகப் பல. இவரிடம் அருள்பெற்ற ஓர் இளைஞன் மணமான பின் தெய்வ கதியாய் இறந்தது அறிந்து இவர் பாடிய பாடல் ஒன்று மிகவும் உருக்கமா னது: