உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:கவிஞரைச் சந்தித்தேன்.pdf/6

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
“அளவளா வில்லாதான் வாழ்க்கை குளவளாக்
கோடின்றி நீர்நிறைந் தற்று.”

கரை இல்லாமல் இருக்கும் குளத்திலே வந்து சேரும் தண்ணீர் எப்படி தங்கி நிற்காமல் வீணாகப் போகுமோ, அதுமாதிரி, சுற்றமற்றவனிடத்தே சேரும் வளமும் தங்காமல் வீணாகும்.

குழந்தையே வாழ்க்கையாகவும், வாழ்க்கையே குழந்தையாகவும் ஊறி, ஊடுருவி நிற்கவல்ல உலகத்தில் நாம் ஊடாடுகிறோம்; ஊடாட வேண்டியவர்களாகிறோம்.

பாடிப்பாடி, நாத்தழும்பேறிய பாடல் இது:
“பிள்ளைக் கனியமுதே-கண்ணம்மா
பேசும்பொற் சித்திரமே!...”

பாரதியைப்போல, சொற் சிக்கனத்துடன், ஆனால் பொருட்பெருக்குக் கொண்டு பாடிக் தெளிந்தவர்கள் மிகக்குறைவு. “மங்கையராக பிறப்பதற்கு மாதவம் செய்திட வேண்டு அம்மா!” என்று பாடிய கவிமணியின் அமர வாக்குக்கிடைத்த வம்சாவளிக் கொடிதான். இந்தக் கண்ணம்மா!

என் வீட்டு ரேடியோவுக்கு வாய்விட்டுப் பாடத் தெரிகிறது:

“நீலவண்ணக் கண்ணு, வாடா!”

7