உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:நீ சிரித்த வேளை.pdf/43

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

நீ சிரித்த வேளை 4蛋 கொண்டே அவன் நகர்ந்து திரும்பினான். அவனோடு சலவை வேட்டியும் சென்றது. மீண்டான். தும்பைப் பூவாகப் பளிச்சிட்டது வேஷ் டி. "தலை வாரிக்கங்க!" என்று கூறி காந்தரால் ஹேர் ஆயில்' புட்டியைக் கழற்றி வைத்தாள். "ஒரு நிமிஷம், " என்று சொல்லிவிட்டு, அறைக்கு வெளியே வந்தான். உதயசூரியனின் திசைநோக்கிக் கரங்கூப்பிக் கைதொழுதான். ஒரு நிமிஷம் அல்ல, ஒன்பது நிமிஷங்கள் வரை அவன் பிரார்த்தனை செய்தான். பிறகு திரும்பி வந்தான். தலை வாரிக் கொண்டான். ஆமாம், தலை முடியைத் தான் வாரிக் கொண்டான். சுருட்டை முடிகளில் அற்புதமான வாசம் கமழ்ந்தது. "நான்கூட இந்த ஆயில்தான் உபயோகிப்பேன்." "ஓஹோ!" என்று சொல்லி, விபூதி மடலிலிருந்து ஒரு துளியை நகக் கண்கொண்டு எடுத்துப் பூசிக் கொண்டான். "நீ விபூதி பூசிக் கொள்றதுதானே?" "ஆஹா!..." திருநீறு ஏந்தப் பூங்கரம் நீட்டினாள் ஏந்திழை, ஆனால் அதற்கு வேலையின்றி, அவனே அவளுக்குப் பூசி விட்டான். "நம்ம ரெண்டு பேருக்கும் இந்தத் திருநீறும் தெய்வமும் தான் இனிக் காப்பு!" என்று உணர்ச்சிப் பெருக்குடன் உரைத்தான் அவன். . - சிவந்த நெற்றியில் வெண்ணிறு துலாம்பரமாக விளங்கிற்று. "இனிமேலாச்சும் இந்தத் திருநீறும் தெய்வமும் என்னைக் காக்கட்டும்!"என்றாள் ஊர்வசி, வேதனையின் நெட்டுயிர்ப்புடன். "கடந்தது கனவாகவே தொலையட்டும்! இனி நல்லதே நடக்கும்னு நம்பு!" என்று தேற்றினான் அவன். - அவள் தன்னை மறந்து கை கூப்பினாள். அவளுக்கு நேரே நின்றவன் அம்பலத்தரசன்ே அவன் சற்று தள்ளி நிற்க முனைந்தான். தெய்வத்துக்குக் குறுக்கே நிற்க ஒப்பவில்லை. அவன் .