உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/34

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

24

பூவையின் சிறுகதைகள்



பாவம், உமையவள்...முன் ஒரு காலத்திலே, ஒற்றைக் கால் தவம் செய்தாளாமே? அன்னையின் கால்கள் எப்படி எப்படியெல்லாம் வவித்திருக்கும்?

அவன் தவித்தான், பாசத் தவிப்பாக இருக்கலாம்; பாசத்தின் தவிப்பாகவே இருக்க வேண்டும்! பட்டணத்தில் சாஸ்திரி நகரில் பெண்டு பிள்ளைகள் எல்லாம் நண்டும், சுண்டும் 'மஹேஸ்வரனே, நீயும் பிள்ளைக் குட்டிக்காரன்தான்; பாசம் படுகிறபாடு உனக்கும் தெரியத்தான் வேனும்! அதனாலேதான், உங்கிட்டே ஒரு சின்ன யாசகத்தை, ரொம்பச் சின்னதான ஒரு பிச்சையைக் கேட்கணும்னு இப்ப என்புத்திக்குத் தோணுது. என்னோட உசிரை இன்னும் ஒரு ஆறேழு வருஷத்துக்காச்சும் கட்டிக் காப்பாற்றி என் கையிலே ஒப்படைச்சிடுவியா, அப்பனே அம்மையப்பனே? உன் பெண்களுக்குக் கல்யாணம் காட்சி நடக்கவேணுமே! அவனுக்கு மட்டுமல்லாமல் அவனுடைய கண்களுக்கும் அழத் தெரிகிறது!... வெள்ளம்1.

காலம் ஒடுகிறது.

ரயிலும் ஓடுகிறது. கொட்டாவி பீறிடுகிறது.

இப்போது நெஞ்சும் வலிக்கத் @త్రాTLఉ5Gమి, ஆற்றாமை மேலிட்டது. பாதங்களை மாற்றிப் போட்டு நிற்கக்கூட முடியவில்லையே? இந்நேரம் அரசாங்கத்துச் செலவிலே முதல் வகுப்பிலே ஜாம்ஜாம்னு பிரயாணம் செய்ய வேண்டியவன், இப்ப எப்படியெல்லாம் பிராண அவஸ்தைப்பட வேண்டியதாயிடுச்சு! கொச்சியிலிருந்து நேற்றைக்குத் தகவல் கிடைச்சிருக்குமே? அரசு முறையிலே மனிதர்கள் இயந்திரமாக அலுவல் பார்த்தாலும், வயது ஐம்பத் தெட்டு முடிந்துவிட்டால், உடனே பதவி ஓய்வு கொடுத்துவிடுவார்கள் அவனுக்கு இப்போது சிரிப்புச் சிரிப்பாக வந்தது. 'நாளை மறுநாள் எனக்கும் ஒய்வு கிடைச்சிடும். இந்த ஒய்வைக் கொண்டாட, என்னைக் கூப்பிட்டிருக்காங்க. நாளைக்கு நான் "நன்னி பறையனும்! விதியோடு விளையாடுகிறவனுக்குச் சிரிப்போடு விளையாடத்தானா தெரியாது..?

கோடைக்கும் குளிர் அடிக்குமோ..?

தேய்பிறை நிலவு அதோ, நெடிதுயர்ந்த தென்னை மரங்களில் கண் சிமிட்டுகிறது.