உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/21

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

பூவை எஸ். ஆறுமுகம்

|

1

கொம்பிலே குந்தவச்சுப் புடாதுங்களா? சோழியன் குடுமி சும்மாவே ஆடாதுங்க இப்பிடி நூத்தியொரு ரூவா கொடுத்ததாலே, ஊர் மத்தியிலே நாலு பேர் நல்லதனமாய்த் தம்மைப் பத்திப் பெருமையோடப் பேசுவாங்க என்கிற நப்பாசை கங்காணிக்கு மட்டும் இருக்காதா என்ன? அவரும் மனுஷப் பிறப்புத்தானுங்களே? சுயநலப் பித்து அவருக்கு மட்டும் இருக்காதுங்களா, மச்சானே? ... அது போகட்டும் பெரிய எடத்து விசயத்திலேருந்து நம்மோட சின்ன எடத்து விசயத்துக்கு வரலாமுங்க..."

"என்னா'

"மூத்தவன் வீரமணி எங்கண்ணுக்குத் தட்டுப்படல்லே, ஆனா, அவனோட கண்ணாலம் காட்சி சம்பந்தப்பட்ட வங்க தட்டுப்பட்டாங்க, சங்கதியை நேரு சீராய் முடிச்சுப்புட்டேனுங்க. சாகுபடி செய்கிறதுக்குக் கூட கோயம்புத்துார்லே ஒரு படிப்பைப் படிச்சுப் பட்டத்தையும் வாங்கிக்கிட்ட நம்ம ராசாப் பயலுக்குப் பொண்ணு குடுக்கிறதுக்கு எங்க அண்ணாச்சி எம்புட்டோ குடுத்து வைச்சிருக்க வேணுமுங்க!"

கிழவிக்கு இருமல் வந்தது.

இந்தக் கிழவர் மறுபடி கனவு காண ஆரம்பித்துவிட்டாரோ?

"மச்சானே!"

"ஏங்க, மச்சான்காரவுகளே! நானு பேசிக்கிட்டே இருக்கேன்; நீங்க பாட்டுக்குப் பேசாமல் இருக்கீகளே? ஏதுணாச்சும் கனா கினா காணுறிங்களா?

"ஆமா, புள்ளே, ஆமா... நான் கனவுதான் காணுறேன்; மனுசங்களுக்கு மட்டுமில்லே, தெய்வத்துக்கும் நாயமான ஒரு கனவைத்தான் காணுறேன்! ஆனா, நீ கனா காணுறதாட்டம், படிச்சுப் பட்டம் வாங்கிக்கிட்ட என்னோட செல்வத்தை ஒன்னோட படிக்காத அண்ணன் மவளுக்குக் கட்டிக் கொடுக்கவே மாட்டேன்"

"என்னாங்கிறேன், இப்படிச் சொல்லிப் போட்டீங்க?"

"பின்னே எப்படிச் சொல்லிப் போடணுமாம்?"