உள்ளடக்கத்துக்குச் செல்

பக்கம்:பூவையின் சிறுகதைகள்.pdf/44

விக்கிமூலம் இலிருந்து
இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்படவில்லை

34

பூவையின் சிறுகதைகள்


பேச்சில் சிக்கிரி கலந்த காப்பித்துள் மணத்தது. காப்பித் துரள், சிக்கிரி விகிதாசார ரகசியமா? மூச்! அது சிதம்பர ரகசியம்!

"ஆகட்டும்!" என்கிறார் ஒதுவார்.

சம்மணக் கோலத்தை மாற்றி உட்கார்ந்த ஒதுவார். கைவசம் அடங்கியிருந்த உரிமைச் சீட்டு வகைகளைக் கண்குவித்துப் படிக்கலானார். முதல் முறை படித்தாயிற்று. மறு தரம் வரிசைப்படுத்தி வாசித்துக்கொண்டு வந்தவர், அடுத்து வந்த சீட்டுத்தாளைக் கையில் தனியே எடுத்து வைத்துக் கொண்டார். "நவராத்திரி அஞ்சாவது நாள் மண்டபப்படி நம்ம ள் சோவன்னா மானா அம்பலவாணன் செட்டியாரோடது" என்று சொல்லி, தொடர்ந்த சொற்களைத் தொடர் சேர்க்க வாய்க்காமல் நிறுத்தினார் ஒதுவார்.

-- o ونو ஆமா, அதுச்கென்ன, ஐயா!

"அதுக்கு ஒண்னுமில்லிங்க ஆனா, அந்தப் பிட்டுக்கு மண்' மண்டப்படியை நடத்தறது யாரின்னுதான் நான் யோசிக்கிறேனுங்க"

"பிட்டுக்கு மண் மண்டபப்படியை நடத்தப் பாத்தியம்

கொண்ட அம்பலவாணன் செட்டியார் இருக்கரால்லவா?"

"புள்ளி இருந்திருந்தால், இந்தப் பிரச்னை ஏன் இப்படிக் கிளம்பப் போகுது? நீங்க பட்டணமே கதின்னு ஆகிட்டவங்க. உங்களுக்குக் கதையே தெரியாது போலிருக்குது, தம்பி!"

"என்ன நடந்திச்சு அவுகளுக்கு?" "என்ன நடக்கக் கூடாதாதோ, அத்தனையும் நடந்திருச்சுது!" "ஆமா தம்பி, எனக்குங்கூட மறந்து போயிட்டுது. அம்பலவாணன் செட்டியார் நம்ப மண்ணைத் துறந்து போய்ப் பத்து மாசத்துக்கு நெருங்கப் போகுது' -

"அட கடவுளே!" "கடவுள் என்ன செய்வார், பாவம்"

ஒதுவார் இடைமறித்தார் : "பாவ புண்ணியத்தோட ஐந்தொகைக் கணக்கைப்பற்றி வெறும் மனுஷங்களான நமக்குப் பேசுறதுக்கு அருகதை இல்லை. ஆனா இந்த ஊர்ச்